48 நாள் இந்த விளக்கை ஏற்றினால், எவ்வளவு பெரிய தீர்க்க முடியாத வியாதியாக இருந்தாலும் அது தீரும். விடாமல் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், விடாமல் இந்த விளக்கை ஏற்றி தான் பாருங்களேன்.

hanuman
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில், வரக்கூடிய வருமானத்தை எதற்கு செலவு செய்கின்றோமோ இல்லையோ, ஹாஸ்பிடலுக்கு கொட்டி கொடுக்கின்றோம். மருத்துவச் செலவு இல்லாமல் இருந்தாலே வாழ்க்கையில் லட்சாதிபதி ஆகிவிடலாம் போல. மருந்து மாத்திரை சாப்பிடாத நாளே இல்லை. டாக்டரிடம் செல்லாத நாளே இல்லை. அவ்வளவு நோய் நொடி பிரச்சனை. ஆரோக்கியத்தில் பிரச்சனை. அதிலும் இப்போதெல்லாம் சாதாரணமாக காய்ச்சல் தலைவலி வந்தாலே பத்து நாட்களுக்கு போட்டு புரட்டி எடுக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்நாள் முழுவதும் இந்த மாத்திரையை சாப்பிட்டால் தான் வாழ முடியும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.

இப்படி உங்களுடைய குடும்பத்தில் தொடர்ந்து மருத்துவ செலவு ஆகுது. தொடர்ந்து உடல்நிலை பிரச்சினை இருக்கிறது. ஆரோக்கியமே இல்லை என்றால் நீங்கள் இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றி பாருங்கள். 48 நாட்களில் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீராத நோய் பிரச்சனைக்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

தீராத நோய் தீர அனுமனுக்கு ஏற்ற வேண்டிய விளக்கு:
தீராத பல வகையான கஷ்டங்களுக்கு தீர்வு தரக்கூடிய சக்தி அந்த ஆஞ்சநேயருக்கு உண்டு. ஹனுமன் கோவிலில் தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். ஹனுமன் போல நாமும் பலசாலியாக மாறலாம். ஹனுமன் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை தொடங்குங்கள்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு கடுகு எண்ணெய், பஞ்சு திரி, கல்கண்டு, வெற்றிலை கட்டாயம் தேவை. அனுமன் கோவிலுக்கு சென்று ஒரு வெற்றிலையை வைத்து, அதன் மேலே மண் அகல் விளக்கை வைத்து, கடுகு எண்ணெய் ஊற்றி, பஞ்சி திரி போட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த வெற்றிலையில் நிவேதியமாக இரண்டு கற்கண்டு வைக்க வேண்டும். ஆஞ்சநேயர் சன்னிதி முன்பாக அமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் இறைவனை மனதார பிரார்த்தனை செய்து உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த தீராத வியாதி தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த விளக்கை ஏற்றலாம். ஆனால் முதல் நாள் எந்த நேரத்தில் இந்த விளக்கை ஏத்தறீர்களோ, அதே நேரத்தில் 48 நாட்களும் தொடர்ந்து இந்த விளக்கை ஏற்ற வேண்டும். முதல் நாள் காலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்றி விட்டால், 48 நாட்களும் காலையில் தான் விளக்கேற்ற வேண்டும். மாலையில் இந்த பரிகாரத்தை நீங்கள் தொடங்கினால் 48 நாட்களும் மாலையில் தான் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். கல்கண்டுக்கு பதில் சர்க்கரை வெல்லம் எது வேண்டும் என்றாலும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஆரோக்கிய பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கி விடும். நோய்வாய்ப்பட்டவர்கள் கையால்தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களால் முடியவில்லை என்றால் அவருக்கு  பதில், அவர்களின் ரத்த சொந்தம் கொண்ட உறவினர்கள் இந்த விளக்கை விளக்கை ஏற்றலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. கணவனுக்காக மனைவி மனைவிக்காக கணவன் என்று இந்த விளக்கை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: இன்று சித்திரை மாத வளர்பிறை பஞ்சமி திதி! இன்று மாலை மட்டும் பூஜை அறையில் வாராகி தாயை நினைத்து இந்த 1 விளக்கை ஏற்றினால், 5 தலைமுறைக்கு உங்கள் குடும்பத்திற்கு தீராத கஷ்டம் என்பதே வராது.

நம்பிக்கையோடு 48 நாள் விளக்கு ஏற்றியும் வீட்டில் தொடர்ந்து மருத்துவ செலவு ஆகிறது என்றால் மீண்டும் தொடர்ந்து இந்த கடுகு எண்ணெயில் அனுமனுக்கு விளக்கு போடலாம். தவறு கிடையாது. விடாமல் ஹனுமனின் பாதங்களில் நம்பிக்கையோடு பற்றிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை ஏற்றி வாருங்கள். படிப்படியாக உங்கள் குடும்பத்தில் மருத்துவ செலவு குறையும். ஆரோக்கியம் பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -