உடல் சோர்வு, தலைவலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாக உங்கள் அசதிகள் அனைத்தும் பறந்து போக இந்த மசாலா டீயை குடித்து பாருங்கள்

tea1
- Advertisement -

காலை தூக்கத்திலிருந்து எழுந்த உடனே உடம்பு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பலரும் டீ குடிக்கின்றனர். அதேபோன்று மாலை நேரத்தில் சற்று சோர்வாக இருந்தது என்றாலும், பசி எடுப்பது போல் தோன்றினாலும் டீ குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஒருசிலர் தலை வலிப்பதுபோல் தோன்றினாலோ அல்லது சோர்வாக இருந்தாலோ டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். அதிலும் சளி பிடித்திருந்தால் நிச்சயம் உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும். சூடாக ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போல் தோன்றும். இது போன்ற நேரங்களில் சாதாரணமாக குடிக்கும் டீ குடிக்காமல் அதனுடன் இந்த மசாலா பொருட்களை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து பாருங்கள். உங்கள் உடம்பில் உள்ள சளி பிரச்சனை, சோர்வு, தலைவலி அனைத்தும் பஞ்சு பஞ்சாக பறந்து போகும். வாருங்கள் இந்த மசாலா டீயை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பால் – மூன்று கப், டீ தூள் – 3 டீஸ்பூன், கிராம்பு – 10, ஏலக்காய் – 10, பட்டை சிறிய துண்டு – 7, இஞ்சி சிறிய துண்டு – 1.

- Advertisement -

செய்முறை:
முதலில் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும், பிறகு இந்த பாலை தனியாக எடுத்து வைத்து ஆற விட வேண்டும் பிறகு சிறிய உரலில் கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டை இவை மூன்றையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இதனுடன் இடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் 3 டீஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து இரண்டிலிருந்து, மூன்று நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஆற வைத்துள்ள பாலையும் சேர்த்து கலந்து விடவேண்டும். பால் சேர்த்த பிறகு இந்த கலவை குறைந்தது 5 நிமிடமாவது கொதிக்க வேண்டும். அப்போது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நன்றாக கொதித்தால் மட்டுமே அந்த மசாலாக்களில் சுவை மற்றும் காரம் டீயின் சுவையில் நிறைந்திருக்கும். இவ்வாறு டீ நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும். பின்னர் இந்த டீயை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். டீயுடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த டீயை குடித்தால் போதும். இதில் இருக்கும் அரோமா சுவையும், காரத்தன்மையும் உங்களுக்கு இருக்கும் களைப்பு அனைத்தையும் போக்கிவிடும்.

- Advertisement -