உடம்பிற்கு சத்து கொடுக்கும் இந்த கருவேப்பிலை சட்னியை இப்படி பக்குவமான முறையில் அரைத்துப் பாருங்கள். 10 இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

karuveppilai-chutney2
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி இவை இரண்டு வகைகளை தான் மாறி மாறி செய்வார்கள். ஆனால் இவை இரண்டிலும் இல்லாத உடல் ஆரோக்கியத்தை விட கருவேப்பிலை சட்னியில் உடலுக்கு தேவைப்படும் சத்துக்கள் நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சட்னியை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். அவ்வாறு அவர்களின் ஆரோக்கியத்திற்கும் இவை நல்ல வகையில் துணை புரிகின்றன. உடம்புக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உணவு பொருட்களை இவ்வாறு விதவிதமாக சமைத்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கருவேப்பிலை

தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 8, பெரிய வெங்காயம் – 1, காய்ந்த மிளகாய் – 8, புளி – நெல்லிகாய் அளவு, தனியா – அரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு காய்ந்த மிளகாயை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயம்

பிறகு இதனுடன் உடைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் தனியா மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு 2 கைபிடி கருவேப்பிலையை இவற்றுடன் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு இவை அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆற வைக்க வேண்டும். பின்னர் இரண்டு சில்லு தேங்காயை தேங்காய் துருவல் பயன்படுத்தி துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் துருவிய தேங்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள மசாலாவையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

curry-leave-chutney

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை கருவேப்பிலை சட்னியுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சத்து நிறைந்த சுவையான கறிவேப்பிலை சட்னி தயாராகிவிட்டது.

- Advertisement -