முடி உதிர்வை படு வேகமாக நிறுத்தி, ராக்கெட் வேகத்தில் உங்கள் முடியை வளர்த்துக் காட்டலாம். இந்த ஹேர் சீரமை மட்டும் தலையில் அப்ளை செய்து பாருங்கள்.

hair11
- Advertisement -

முடி கொட்டும் பிரச்சனையை நிறுத்தி விட்டால், முடி வளரக்கூடிய வேலை தானாக நடக்கும். சீப்பை வைத்து தலை சீவினால் முடி கொத்துக்கொத்தாக கொட்டுகிறது. ரப்பர் பேண்டை அவிழ்த்தால் முடி அதோடு அவிழ்ந்து வருகிறது. தலையில் எதுவுமே செய்யவில்லை என்றால் கூட முடி அது பாட்டிற்கு உதிர்கிறது. வேகமாக காற்று அடித்தால் கூட சில பேருக்கு முடி உதிர்வு இருக்கும். இப்படிப்பட்ட முடி உதிர்வை நிறுத்துவதற்கு ஒரு சூப்பரான ஹேர் சீரமை நம் வீட்டிலேயே, நம் கையாலேயே தயாரிக்கப் போகின்றோம். அது எப்படி. சூப்பரான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

ராக்கெட் வேகத்தில் முடியை வளர வைக்க ஹோம் மேட் ஹேர் சீரம் தயாரிக்கும் முறை:
இந்த அழகு குறிப்புக்கு நாம் நான்கு பொருட்களை மட்டும் தான் பயன்படுத்த போகின்றோம். இந்த நான்கு பொருட்களையும் சரியாக முதலில் வாங்க வேண்டியது உங்களுடைய வேலை. அந்த நான்கு பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் பார்த்து விடுவோம். அலோவேரா ஜெல், பிளாக் சீட் ஆயில்(black seed oil), ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் (Rosemary essential oil), ரோஸ் வாட்டர் இந்த நான்கு பொருட்களுமே உங்களுக்கு தரமானதாக இப்போது கடைகளில் கிடைக்கின்றது. வாங்கிக் கொள்ளுங்கள். கடைகளில் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்தும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பாக ஆலுவேரா ஜெல்லில் எந்த ஒரு கலரும், வாசனை திரவியம் சேர்த்து இருக்கக் கூடாது. கடையில் வாங்கினாலும் வெள்ளையாக இருக்கக்கூடிய ஜெல்லாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் இயற்கையாக கற்றாழை கிடைத்தால் அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கூட, எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து இந்த குறிப்புக்கு பயன்படுத்துவது மிகவும் நல்லது.

ஒரு சிறிய பவுலில் அலோவேரா ஜெல் 2 ஸ்பூன், பிளாக் சீட் ஆயில் 2 ஸ்பூன், ரோஸ்மேரி ஆயில் 15 சொட்டு, ரோஸ் வாட்டர் 1/4 கப், ஊற்றி இதை ஒரு ஸ்பூனால் அடித்துக் கலக்கவும். இது வெள்ளை நிறத்தில் ஒரு ஜெல் போல உங்களுக்கு கிடைக்கும். கொஞ்சம் லிக்விட் ஆகத்தான் கிடைக்கும். அதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ளவும். (இதில் கடையில் வாங்கிய ஆலோவேரா ஜெல் சேர்த்தால் ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் 7 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். நேரடியாக கற்றாழையிலிருந்து ஜெல் எடுத்து, இந்த சீரம் தயார் செய்தால், அதை பிரிட்ஜில் வைத்து தான் ஸ்டோர் செய்ய வேண்டும்.)

- Advertisement -

நமக்கு தேவையான ஹேர் சீரம் கிடைத்துவிட்டது. இதை தான் தலையில் அப்ளை செய்ய வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு, இந்த ஜெல்லை கவனமாக வேர்க்கால்களில் படும்படி தலையில் வைத்து, மசாஜ் செய்யவும். உங்களுடைய வீட்டில் உதவி செய்வதற்கு யாராவது இருந்தால் அவர்களை உங்களுடைய தலையில் இதை அப்ளை செய்ய சொல்லுங்கள். பஞ்சில் தொட்டும் இதை தலையில் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்யலாம். அப்படி இல்லை என்றால் இங்க்கு பில்லர் போல் பாட்டில்கள் இப்போது கிடைக்கிறது அல்லவா.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் பொடுகு நீங்கி தலைமுடி சுத்தமாக என்ன செய்ய வேண்டும்? இழந்த முடி வளர்ச்சியை மீண்டும் தூண்டிவிட இப்படி செய்யுங்கள்!

அதில் சொட்டு சொட்டாக எடுத்தும் அப்படியே ஸ்கேல்பில் சில சொட்டுகளை வைத்து, ஸ்கேல் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்து விட்டு விடுங்கள். மறுநாள் காலை எழுந்து எப்போதும் போல தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இதை தலையில் போட்டு வரும்போது முடி உதிர்வு குறைந்து முடி சீக்கிரம் வளரத் தொடங்கும். குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -