ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி தோசை சுடுவது இவ்வளவு ஈஸியா? உடனே செஞ்சு பார்த்து விடுவோமா?

karuppatti-dosai2
- Advertisement -

வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இன்று பலரும் அதனை தவிர்த்து மாற்று வழிகளை நோக்கி பயணம் செய்கின்றனர். முந்தைய காலங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அதிக அளவில் புழக்கத்தில் இருந்துள்ளது. சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தும் இந்த கருப்பட்டியில் இருக்கும் சத்துக்கள் நம் உடலை நோயிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது எனவே ஆரோக்கியம் நிறைந்த கருப்பட்டி தோசை ரொம்ப எளிதாக எப்படி சுடலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும் இந்த கருப்பட்டி இன்று பல நூறு ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது ஆனால் நம் முன்னோர்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்த இந்த கருப்பட்டியின் மகிமை நமக்கு ஏனோ முன்னமே புரியாமல் போய்விட்டது. சுட சுட கருப்பட்டி தோசை இப்படி சுட்டு கொடுத்தால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

கருப்பட்டி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
கருப்பட்டி – 100 கிராம், அரிசி மாவு – 4 டீஸ்பூன், கோதுமை மாவு – 100 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், நெய் தேவையான அளவு.

கருப்பட்டி தோசை செய்முறை விளக்கம்:
முதலில் கருப்பட்டியை தேவையான அளவிற்கு எடுத்து பொடிப்பொடியாக பொடித்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதனுடன் தேவையான அளவிற்கு கொஞ்சம் போல் நீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள். கருப்பட்டி நன்கு கரைந்ததும் அதனை தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த கருப்பட்டியுடன் 4 டீஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கோதுமை மாவு சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கப் அளவிற்கு தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எல்லாவற்றையும் நன்கு கலந்து கரைத்துக் கொள்ளுங்கள். பின் இது தோசைமாவு பதத்திற்கு வர வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசைக்கல்லை வைத்து சுட வைத்துக் கொள்ளுங்கள். தோசை கல் நன்கு சூடேறியதும் கல் தோசை சுடுவது போல கருப்பட்டி கலந்த இந்த மாவை ஊற்றி தடிமனாக சுட்டுக் கொள்ளுங்கள். சுற்றிலும் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி கொள்ளுங்கள்.

இருபுறமும் சிவக்க நன்கு வேக எடுத்து பரிமாறினால் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள இந்த கருப்பட்டி தோசையை அடிக்கடி சாப்பிட முடியாவிட்டாலும், வாரம் ஒரு முறையாவது செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்மைகளை கொடுக்கும். கருப்பட்டியில் இருக்கும் கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து நம் அன்றாட உணவில் நமக்கு முழு நிறைவை கொடுக்கக் கூடியது ஆகும்.

பற்கள், எலும்புகள் வலுப்பெறுவதற்கு கால்சியம் சத்து தேவை, அது போல் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற சுண்ணாம்புச் சத்து தேவை. இந்த இரண்டு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த கருப்பட்டி தோசை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கருப்பை பிரச்சினைகள் தீர்ந்து ஆரோக்கியம் கிடைக்கும். கருப்பட்டி இனிப்பு தோசை என்பதால் அதற்கு தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை. குழந்தைகள் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள், பெரியவர்களாக இருந்தால் நெய்க்கு பதிலாக நல்லெண்ணெய் ஊற்றி கொடுக்கலாம். இதில் அப்பம் கூட சுட்டு சாப்பிடலாம்.

- Advertisement -