2 கொத்து கறிவேப்பிலை இருந்தா ரெண்டு நிமிஷத்துல இப்படி குழம்பு வைத்து விடலாம்! எடை குறைக்க உதவும் இந்த குழம்பு அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.

karuveppilai-kuzhambu2
- Advertisement -

கருவேப்பிலை குழம்பு எடையை குறைக்க உதவும் ஒரு அற்புதமான குழம்பு வகையாகும். மேலும் தலைமுடியை நன்கு செழிப்பாக வளர, கருமையாக வளர உதவி செய்யும். குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் அதிகம் சுரக்க இந்த குழம்பை சாப்பிட்டு வரலாம், வயிற்றில் இருக்கும் கசடுகளையும் நீக்கும் அற்புத ஆற்றல் இதற்கு உண்டு. இத்தகைய ஆரோக்கியம் காக்க உதவும் இந்த கருவேப்பிலை குழம்பு ரொம்பவே ருசியானதாக இருக்கும். செய்யவும் சுலபம் தான் எனவே இதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

karuveppilai

கருவேப்பிலை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – 2 கைப்பிடி நிறைய, முழு பூண்டு – 5, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

- Advertisement -

கருவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் பச்சையாக இருக்கும் நல்ல கருவேப்பிலைகளை கொத்தாக 2 கொத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை உருவினால் 2 கைப்பிடி அளவிற்கு கருவேப்பிலை கிடைக்க வேண்டும். நன்கு கருவேப்பிலைகளை அலசிக் தண்ணீரை உத்தரவிட்டு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக கறிவேப்பிலையை சாப்பாட்டில் பார்க்கும் பொழுது நாம் அதனை ஒதுக்கி விடுவது உண்டு. ஆனால் இப்படி குழம்பு செய்து கொடுத்தால் சாப்பிட்டு தானே ஆக வேண்டும்?

karuveppilai-kuzhambu

கறிவேப்பிலையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சீரகம், ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைபடுவதற்கு தேவையான அளவிற்கு தண்ணீரை தாராளமாக ஊற்றி அரைக்கலாம். பின்னர் ஒரு குக்கரை வைத்து அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் முழு பூண்டு 5 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பற்களாக பிரித்து தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு கைப்பிடி நிறைய பூண்டு கிடைக்கும். இதனை குக்கரில் போட்டு கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்த விழுதையும் ஊற்றிக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரையும் சேர்த்து ஊற்றுங்கள். குழம்பு கொதித்து வரும் வேளையில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளுங்கள். குழம்புக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வையுங்கள். 2 விசில் விட்டதும் பூண்டு பற்கள் நன்கு வெந்து கறிவேப்பிலை குழம்பு கெட்டியாகி விடும். இப்போது ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெயை மேலே ஊற்றி கொள்ளுங்கள்.

karuveppilai-kuzhambu1

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் குழம்பில் தாளித்துக் கொட்டி இறக்கி சுடச்சுட சாதத்துடன் பரிமாறினால் அவ்வளவு ருசியான குழம்பு, ஆரோக்கியமான குழம்பு தயாராகி விட்டிருக்கும். குழந்தை பெற்ற தாய்மார்கள் குறிப்பாக இந்த குழம்பை சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கும் கசடுகள் நீங்கும். தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மேலும் எடை குறைய விரும்புபவர்கள் இந்த குழம்பை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இதே முறையில் நீங்களும் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -