தக்காளி, வெங்காயம் இல்லையா? 1/2 கப் உளுந்து இருந்தால் போதும் கமகமன்னு ஆரோக்கியம் நிறைந்த உளுந்து சட்னி 10 நிமிடத்தில் இப்படி செஞ்சா இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமா இருக்குமே!

ulunthu-chutney2
- Advertisement -

ஆரோக்கியம் நிறைந்த இந்த உளுந்து சட்னி சுவையிலும் குறைந்து போய் விடவில்லை. வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் சட்னி வகைகளைக் காட்டிலும் ரொம்பவே சூப்பரான சுவையுள்ள இந்த உளுந்து சட்னி செய்வதற்கு 10 நிமிடம் கூட ஆகாது! குறைந்த பொருட்களை வைத்து ஆரோக்கியம் நிறைந்த இந்த சுவையான உளுந்து சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ulunthu

உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்து – கால் கப், பூண்டு பல் – 2, வர மிளகாய் – 5, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், புளி – சிறு கோலிகுண்டு அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

உளுந்து சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அரை கப் அளவிற்கு உளுந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி செய்வதற்கு வெங்காயம், தக்காளி எதுவுமே தேவையில்லை. தேங்காய்த் துருவல் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் அரை கப் உளுந்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

உளுந்தை வறுக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து நல்ல வாசம் வர, சிவக்க வறுபட்டதும் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். வர மிளகாயை காம்பு நீக்கி சேர்த்து கருகி விடாமல் மிதமான தீயில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் லேசாக வறுக்கவும்.

- Advertisement -

பின் புளிப்பு சுவைக்கு ஒரு சிறு கோலிகுண்டு அளவு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பொருட்களையும், வறுத்து வைத்துள்ள உளுந்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்.

ulunthu-chutney

அதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு வர மிளகாயைக் காம்பு கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் போட்டு இறக்கினால் கமகமக்கும் ஆரோக்கியம் நிறைந்த உளுந்து சட்னி நொடியில் தயார்! இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதே முறையில் ஒரு முறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -