தல முடி வேகமாக வளரவும், முடி கொட்டுவது நிற்கவும், செம்பருத்தி பூவை கொண்டு இதை எல்லாம் செய்யலாம்.

Hibiscus hair pack in Tamil
- Advertisement -

தலை முடி வளர செம்பருத்தி பூ

பார்ப்பதற்கு மிகவும் அழகான மலர்களில் செம்பருத்தி பூ ஒன்றாகும். இந்த செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள் குறித்து நமது நாட்டின் பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு பண்டைக்காலம் முதலே நம் முன்னோர்கள் செம்பருத்தி மலரை பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பெண்கள் தங்கள் தலைமுடியில் ஏற்படுகின்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை தீர்க்க, இந்த செம்பருத்தி மலர்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு 1 – செம்பருத்தி ஹேர் பேக்

பண்டைய காலம் முதலே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையான ஷாம்பூவாக செம்பருத்தி மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தலைமுடிகளில் இருக்கின்ற எண்ணெய் பிசுகளை போக்குவதற்கும், இந்த செம்பருத்தி மலர்களை பயன்படுத்தி உள்ளனர். அந்த வகையில் தற்காலத்தில் பெண்களின் தலை முடியை சீராக்கி, அதை அழகாகவும் பளபளப்பாகவும் வளரச் செய்ய ஒரு நடுத்தரமான கிண்ணத்தில் சிறிதளவு வெந்நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு செம்பருத்தி மலர்களை போட்டு ஒரு 15 நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த மலர்களை எடுத்து, நன்கு அரைத்து கூழ் பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த செம்பருத்தி கூழை எடுத்து பெண்கள் தங்கள் தலை முடியின் வேர் பகுதியில் ஊரும் வரை, நன்றாக தேய்த்து மசாஜ் செய்து ஒரு ஐந்து நிமிடம் வரை அப்படியே விட்டுவிட்டு, பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு தலைமுடியை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒருமுறை செய்து வந்தாலே பெண்களின் தலைமுடி கருகருவென வளர்ந்து, பளபளப்பாகவும் அழகாகவும் திகழும்.

குறிப்பு 2 – செம்பருத்தி ஹேர் ஆயில்

தலையில் தலை முடி உதிர்ந்து விட்டாலே, பெண்களுக்கு மனம் நொந்து விடும். பொதுவாக தலை முடி அடிக்கடி உதிர்வதற்கு, தலைமுடி வேர்களுக்கு அதிக ஊட்டச்சத்து இல்லாதது தான் காரணம். பெண்கள் தங்கள் தலையில் இருந்து முடி உதிராமல் இருக்க, சிறிதளவு செம்பருத்தி மலர்களைப் பறித்து, அதை நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த காய்ந்த செம்பருத்தி மலர்களை எடுத்து, சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்ட பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். செம்பருத்தி மலர்களில் இருக்கின்ற சத்துக்கள் அனைத்தும் அந்த தேங்காய் எண்ணெயில் நன்கு ஊறி கலந்து விடும். இந்த தேங்காய் எண்ணெயை தினந்தோறும், பெண்கள் தங்களின் தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

- Advertisement -

குறிப்பு 3 – Hibiscus for soft hair in Tamil

சில பெண்களின் தலைமுடி கோரையாகவும், தொட்டுப் பார்த்தால் மிருதுவான உணர்வை தராமலும் இருக்கும். தங்களின் தலைமுடி பட்டு போன்று மென்மையாக இருக்கவும், தலைமுடி உதிராமல் தடுக்கவும், அதீத தலைமுடி வளர்ச்சி உண்டாகவும் தேவையான அளவு செம்பருத்தி மலர்களை எடுத்து, நன்கு அரைத்து அதை ஒரு பேஸ்ட் பதத்தில் கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து பெண்கள் தங்கள் தலைமுடியின் வேர்பகுதி முதல் நுனிப்பகுதி வரை நன்றாக தடவி, ஒரு 45 நிமிடம் அப்படியே விட வேண்டும் அதன் பிறகு குளிர்ந்த நீரை கொண்டு, ரசாயனங்கள் கலக்காத ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதால் மேற்சொன்ன பலன்களை பெண்கள் பெற முடியும்.

- Advertisement -