ஒல்லிக்குச்சி போல் இருக்கும் முடியை, கத்தை கத்தையாக கைக்கு அடங்காமல் வளர்க்க வேண்டுமா? இதோ ஊட்டச்சத்து நிறைந்த செலவில்லாத ஹேர் பேக்.

hair
- Advertisement -

சில பேருடைய முடி வளர்ச்சியை பார்க்கும் போதே நமக்கு பொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அடர்த்தியான முடி நமக்கு இல்லையே என்று. அப்படி நம்முடைய முடியை பார்த்தும் நாலு பேர் கண்ணு போடும் அளவுக்கு அழகா வளர்க்கணும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கா. அதற்கு நம்முடைய முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்தை எப்படி கொடுப்பது? அதுவும் செலவு இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஹேர்பேக் போட்டு முடியை எப்படி வளர்ப்பது என்பதை பற்றிய எளிமையான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக. இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் நிச்சயமாக ஒல்லிக்குச்சி போல இருக்கும் உங்கள் முடி, கத்தை கத்தையாக அடர்த்தியாக மாறும்.

அடர்த்தியான முடி வளர்ச்சியை தரும் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். வெந்தயம் 2 ஸ்பூன், அரிசி வடித்த கஞ்சி தேவையான அளவு, செம்பருத்தி பூ 5 லிருந்து 6, சின்ன வெங்காயம் – 4 பல் தோல் உரித்தது. நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்கள் என்றால் ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக் கொள்ளலாம். (உங்கள் முடிக்கு தகுந்தபடி செம்பருத்திப் பூ, வெந்தயம் இவைகளை கூட்டி, குறைத்து சேர்த்துக் கொள்ளலாம். தவறு கிடையாது.) இந்த பொருட்களை எல்லாம் வைத்து ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை இந்த ஹேர் பேக்கை போட போவதாக இருந்தால் முந்தைய நாள் இரவே 2 ஸ்பூன் வெந்தயத்தில், அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலை மிக்ஸி ஜாரை எடுத்து ஊறி இருக்கும் இந்த வெந்தயத்தை அந்த தண்ணீரோடு சேர்த்து மிக்ஸி ஜாரில் ஊற்றிக் கொள்ளவும். இதோடு காம்புகள் நீக்கப்பட்ட செம்பருத்திப் பூ இதழ்களை போட்டு கொள்ளவும். அடுத்த தோல் உரித்த சின்ன வெங்காயத்தை போட்டுக் கொள்ளவும். எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்தால் ஷாம்பு போல கொழகொழப்பாக ஒரு ஹர்பாக் நமக்கு கிடைத்திருக்கும். இதை மெல்லிசான காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். ஆனால் வடிகட்டி எடுத்து விட்டால் வெந்தயத்தின் திப்பி தலையில் ஒட்டாமல் இருக்கும்.

வடிகட்டி எடுத்த திக்கான ஷாம்பு போல இந்த பேக் இருக்கும். இந்த ஹேர் பேக்கில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்க்கவும். உங்களுக்கு மஞ்சள் கருவின் வாடை வீசினால் பிரச்சனை இல்லை என்றால் ஒரு முழு முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ளலாம். முட்டையின் வாடை தலையில் வீசக்கூடாது என்றால் 3 சொட்டு ஏதாவது வாசம் நிறைந்த எசன்சியல் ஆயிலை இதோடு சேர்த்துக் கொள்ளலாம். வாசம் நிறைந்த எசன்சியல் ஆயில் சேர்த்துக் கொள்வது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

அரைத்த விழுதில் முட்டையை சேர்த்து நன்றாக அடித்து கலந்தால் சூப்பரான ஹேர்பேக் கிடைத்திருக்கும் அல்லவா. இதை உங்களுடைய தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து ஒரு மணி நேரம் கழித்து இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு, 30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து விட வேண்டும். இந்த ஹேர் பேக்கே உங்களுக்கு ஷாம்பு கண்டிஷனர் போல இருக்கும். இருந்தாலும் மைல்டான ஷாம்பு போட்டு தலையை சுத்தமாக அலசி விடுங்கள். ஒருமுறை இந்த பேக்கை பயன்படுத்தியப் பிறகு ரிசல்ட் உங்களுடைய முடியை சூப்பராக மாற்றிவிடும். முடி அவ்வளவு சாஃப்ட்டாக அவ்வளவு பவுன்ஸ் ஆக தெரியும்.

இதையும் படிக்கலாமே: ஷாம்பூவை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்ன்னு யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த ஷாம்பு வச்சு செய்யலாம் தெரியுமா? இதெல்லாம் தெரிஞ்சா நீங்களே ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.

வாரத்தில் ஒரு நாள் என்ற கணக்கில் மாதத்தில் 4 நாட்கள் இந்த பேக்கை போட்டு வந்தாலே, உங்களுடைய தலைமுடி அவ்வளவு அழகாக அடர்த்தியாக வளர தொடங்கி விடும். வழுக்கையான இடத்திலும் முடி வளர்ச்சி இருக்கும். முடி உதிர்வு உடனடியாக கட்டுப்படுத்தப்படும். இந்த எளிமையான ஹேர் பேக் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -