உருளைக்கிழங்கு சாறு இருந்தால் போதும். வெறும் 10 நிமிடத்தில் பியூட்டி பார்லரில் ப்ளீச் செய்தது போல உங்களுடைய முகத்தை பளிச்சென்று மாற்றலாம்.

face8
- Advertisement -

முகம் அழகாக வேண்டும் வெள்ளையாக வேண்டும் என்றால் உடனடியாக பியூட்டி பார்லருக்கு சென்று கெமிக்கல் கலந்த ப்ளீச்சை செய்து கொண்டு முகத்தை அப்படியே 30 நிமிடத்தில் பளிச்சு பளிச்சென வெள்ளையாக மாற்றிவிடலாம். ஆனால் இது எவ்வளவு நம்முடைய சருமத்திற்கு ஆபத்தைக் கொடுக்கும் என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை. கெமிக்கல் கலந்த ப்ளீச்சை ஒருபோதும் முகத்திற்கு அடிக்கடி செய்யாதீங்க. அது நமக்கு காலப்போக்கில் நிறைய பக்க விளைவுகளை உண்டு பண்ணி விடும். இருக்கும் அழகைக் கூட இல்லாமல் மாற்றிவிடும். அதிலும் குறிப்பாக முகத்தில் உள்ள முடிகளை எல்லாம் உடனடியாக வெள்ளையாக மாற்றக்கூடிய ப்ளீச் செய்யவே செய்யாதிங்க.

ரொம்ப ரொம்ப இயற்கையான முறையில் சேஃபா வீட்டிலிருந்தபடியே முகத்தை ப்ளீஸ் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ப்ளீச் செய்வதற்கு நாம் உருளைக்கிழங்கு சாறு தான் முதல் பொருளாக பயன்படுத்தப் போகின்றோம். ஆக உருளைக்கிழங்கு சாறு நமக்கு முதலில் தேவை.

- Advertisement -

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி விட்டு மேலே இருக்கும் தோலை சீவி, துருவி ஒரு வடிகட்டியில் பிழிந்தால் சாறு நமக்கு கிடைக்கும். தண்ணீர் ஊற்றி எல்லாம் ஊற்றி சாறு எடுக்கக் கூடாது. வெறும் உருளைக்கிழங்கை துருவி பிழிந்த சாறை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு எலுமிச்சம் பழச்சாறு 2 ஸ்பூன் நமக்கு தேவை. அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி மாவு 2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 2 ஸ்பூன், இதை பேஸ்ட் ஆக கலக்குவதற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கு சாறு ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி இதை பேஸ்ட் ஆக கலக்கக்கூடாது. வெறும் உருளைக்கிழங்கு சாறை ஊற்றி கலந்து இந்த பேக்கை இரண்டு நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய முகத்தை சுத்தமாக கழுவி துடைத்துக் கொண்டு, இந்த பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்தால் நன்றாக டிரை ஆகிவிடும். அதன் பின்பு முகத்தை தண்ணீரைக் கொண்டு நனைத்துக் கொண்டு லேசாக வட்ட வடிவில் ஸ்க்ரப் செய்து கழுவி விட்டால், முகம் உடனடியாக பொலிவு பெறும். எலுமிச்சை பழச்சாறு உங்கள் ஸ்கின்னுக்கு செட் ஆகுதா பாத்துட்டு, அதன் பின்பு இந்த பேக்கை போடுங்க. எலுமிச்சை பழச்சாறு உங்களுக்கு அலர்ஜியை கொடுக்கும் என்றால் அதை தவிர்த்து விடுங்கள்.

மாதத்தில் இந்த இரண்டு நாட்கள் இந்த ப்ளீச்சை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். நம்முடைய சருமம் பொலிவு பெறும். படிப்படியாக கரும்புள்ளிகள் குறைவதையும் காண முடியும். முகத்தில் இருக்கும் அழுக்குகள் டெட் செல்லை முகத்தில் இருந்து நீக்கவும் இந்த பேக் பயன்படும். உங்களுக்கு இந்த ப்ளீஸ் பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -