முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்கும் தேங்காய் எண்ணெய்.

hair oil
- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் முடி உதிர்வு என்ற பிரச்சனை சர்வ சாதாரணமாக அனைவரிடமும் தென்படுகிறது. வளரும் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர் வரை இந்த முடி உதிதல் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்கிறது. இந்த முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் வீட்டிலேயே தயாரிக்க கூடிய எளிமையான இந்த ஒரு தேங்காய் எண்ணெயை வாரத்தில் மூன்று நாட்கள் உபயோகித்தாலே முடி உதிர்தல் நின்று முடி அடர்த்தியாக வளரும். அந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக முடி உதிர்தல் ஏற்படுவதற்கு உடலில் போதுமான சத்து இல்லாமை, நீர்ச்சத்து குறைதல், பொடுகு போன்ற சரும பிரச்சனைகள், பரம்பரை வழியாக முடி உதிதல் ஏற்படுதல், மன அழுத்தம், தூக்கமின்மை, முடியை முறையாக பராமரிக்காமல் இருப்பது என்று பல காரணங்கள் இருக்கின்றன.

- Advertisement -

என்னதான் நாம் பல ஹேர் பேக்குகளையும், ஹேர் ஆயில்களையும் பயன்படுத்தினாலும் உடலுக்குள்ளும் நமக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல் மனதை என்றும் மகிழ்ச்சியுடனும், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாமல் பாதுகாப்பதின் மூலமும் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க முடியும்.

இப்பொழுது முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்யக்கூடிய தேங்காய் எண்ணெயை வீட்டில் எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். இதற்கு நமக்கு ஒரு கப் அளவிற்கு சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் வேண்டும். அதேபோல் ஒரு கப் அளவிற்கு வேப்ப இலையையும், ஒரு கப் அளவிற்கு கருவேப்பிலையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஐந்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக ஒரு கற்றாழை கீற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு இடிக்கல்லில் வேப்பிலை, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் மூன்றையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. மிக்ஸியில் அரைப்பதை தவிர்த்து விட்டு இடிக்கலில் இடித்து சேர்க்க வேண்டும். நன்றாக இடித்த பிறகு இந்த பொருட்களை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க வேண்டும். பிறகு சோற்றுக்கற்றாழையை பொடி பொடியாக நறுக்கி அதையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து டபுள் பாய்லிங் மெத்தடில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீர் கொதித்த பிறகு தேங்காய் எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்தை அதற்குள் வைத்து 15 நிமிடங்கள் அடுப்பில் அப்படியே வைத்து விட வேண்டும்.

15 நிமிடம் கழித்து அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து ஆற வைத்து வடிகட்டி பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சேர்க்கப்பட்டுள்ள வேப்பிலை தலையில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனைகள் மற்றும் வேறு ஏதாவது சர்ம பிரச்சனைகள் இருந்தால் அதிலிருந்து பாதுகாக்கும். கருவேப்பிலையில் இருக்கக்கூடிய சத்துக்களால் முடி உதிர்தல் பிரச்சனை குறையும். அது மட்டும் அல்லாமல் இளநரை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் குறையும்.

- Advertisement -

சின்ன வெங்காயத்தில் முடியின் வளர்ச்சியை தூண்டக்கூடிய சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் வழுக்கை தலையில் கூட சின்ன வெங்காயத்தை தேய்த்தால் முடி வளரும் என்று கூறப்படுகிறது. சோற்றுக்கற்றாழை உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தவிர்த்து உடலை குளிர்ச்சியாகவும் அதேசமயம் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: கழுத்து கருமை நீங்க இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

கடைகளில் விற்கப்படும் எண்ணெய்களை உபயோகப்படுத்துவதை விட நாமே நம் கைகளால் பார்த்து பார்த்து சுத்தமாக தயாரிக்க கூடிய இந்த எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை என்பது படிப்படியாக குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

- Advertisement -