இந்த ஒரு கரைசல் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் வீட்டு செடிகளில் இருக்கும் பூச்சிகளும் ஓடிவிடும். பூக்களும் கொத்துக்கொத்தாக பூக்கும்

plant
- Advertisement -

வீட்டில் தோட்டம் வைத்து அவற்றை அழகாக பராமரிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் கடைகளில் இருந்து செடிகளை வாங்கி வந்து வீட்டில் சரியான முறையில் நட்டு வைத்து வளர்த்து வந்தாலும் அவை சீக்கிரத்தில் அழுகி இறந்துவிடுகிறது. அல்லது பூக்கள் பூக்காமல் காய்ந்து விடுகிறது. இதற்காக பல முயற்சிகள் செய்தும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதில்லை. இவ்வாறன பிரச்சனைகளை விரைவாக சரி செய்யும் ஒரு எளிய வழிமுறையை தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

flower-garden

நர்சரிகளில் இருந்து பூச்செடிகளை வாங்கி வரும் பொழுது அதில் எண்ணற்ற பூக்கள் அழகாக பூத்திருக்கும். ஆனால் நாம் அதனை வீட்டில் வைத்து வளர்க்கும் பொழுது அதில் உள்ள பூக்கள் அனைத்தும் கருகி காய்ந்து விடும். அல்லது செடி நன்றாக தழைத்து வளர்ந்து அதில் எந்தவித பூக்களும் பூக்காமல் இருக்கும். காய்கறி செடிகளாக இருந்தாலும் அவற்றிலும் இவ்வாறான பிரச்சினைகளே ஏற்படும். சில சமயங்களில் பூக்கள் பூக்கும் ஆனால் பிஞ்சு வைக்காமல் பூக்கள் உதிர்ந்து விடும். இவ்வாறான பிரச்சினைகளை இந்த ஒரு அற்புத கரைசலை பயன்படுத்தி எளிதில் சரிசெய்ய முடியும்.

- Advertisement -

கரைசல் தயார் செய்யும் முறை:
இதற்காக முதலில் ஏதேனும் பெட்டி கடைகளிலில் பயன்படுத்தும் சாக்லேட் டப்பாவை வாங்கி வரவேண்டும். பிறகு மீதமான பழைய சாதம் அல்லது வீணாகிய சாதம் எதுவாக இருந்தாலும் இரண்டு கப் அளவு எடுத்து இந்த பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு இதில் ஒரு கப் அளவு பாகு வெல்லத்தை சேர்க்க வேண்டும். பின்னர் நன்றாகப் புளித்த தயிரை ஒரு கப் அளவிற்கு இதனுடன் சேர்க்க வேண்டும். இவை மூன்றையும் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து விட்ட பின்னர் 6 கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இவற்றுடன் ஏற்கப்படும் தண்ணீர் இந்த அளவை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க கூடாது. பிறகு ஒரு கரண்டியை பயன்படுத்தி அனைத்தையும் நன்றாக கலந்துவிட்டு டப்பாவை மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.

rice

இவ்வாறு அனைத்தையும் ஒன்று கலந்து டப்பாவை இறுக்கமாக மூடி வைத்து, ஒரு ஓரமாக ஐந்திலிருந்து ஏழு நாட்களில் அப்படியே வைத்துவிடவேண்டும்.பின்னர் ஏழு நாட்கள் கழித்து டப்பாவை திறக்கும் பொழுது இந்த கரைசல் நன்றாக புளித்து இருக்கும். அதன் பின் இந்த கரைசலை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு வடிகட்டிய கரைசலை மீண்டும் வேறு டப்பாவிற்கு மாற்றி வைத்துக்கொண்டு இதனை எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் அப்படியே வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -

பயன்படுத்தும் முறை:
5 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் வடிகட்டி வைத்துள்ள கரைசலில் இருந்து 150 கிராம் எடுத்து தண்ணீருடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த தண்ணீரை பூச்சி விரட்டியாக பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து கொண்டு செடி முழுவதும் ஸ்ப்ரே செய்வதன் மூலம் பூச்சிகள் அனைத்தும் இறந்து விடும். அல்லது வேறு பிரச்சனைகளுக்காக பயன்படுத்த வேண்டுமென்றால் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் அளவு தண்ணீரைக் செடியின் வேர்ப் பகுதியில் ஊற்றிவிட வேண்டும்.

plants-spray

இவ்வாறு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் செடிகளில் பூச்சிகள் வராமல் இருக்கும். பூக்களும் கொத்துக்கொத்தாக பூக்கும். காய் கறி செடிகளிலும் நல்ல விளைச்சல் இருக்கும். இவ்வளவு எளிமையான கரைசலை நீங்களும் ஒருமுறை செய்து உங்கள் தோட்டத்தில் பயன்படுத்தி பாருங்கள். நீங்களே எதிர்பார்க்காத வகையில் அட்டகாசமான பலன் உங்களுக்கு கிடைத்திடும்.

- Advertisement -