இதவிட சுலபமா கேக் செய்யவே முடியாதுங்க. 1 கப் ரவை இருக்கா உங்க வீட்டில! 20 நிமிஷத்துல, உங்க கையாலேயே சூப்பர் கேக் செஞ்சு அசத்துங்க!

rava-cake1
- Advertisement -

வீட்டிலேயே கேக் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். பேக்கிங் அவன் இல்லாமல், சோடா உப்பு, சோடா பவுடர், முட்டை எதுவுமே இல்லாமல் சுலபமான முறையில், ஒரு கப் ரவையை வைத்து நம் வீட்டிலேயே, சுவையான பஞ்சுபோன்ற கேக்கை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். வேகவைக்க குக்கர், உப்பு கூட தேவையே இல்லை. குழம்பு வைக்கிற மாதிரி, இந்த கேக் செஞ்சி முடிச்சிடலாம். வாங்க! எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?

rava-cake

Step 1:
முதலில் ரவை – 1 1/4 கால் கப் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை – 1 கப் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் வாசம் பிடிக்கும் என்றால், இதில் இரண்டு ஏலக்காயும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 2:
ஒரு அகலமான பவுலில் பால் – 1/2 கப், ரீஃபைண்ட் ஆயில் – 1/2 கப், தயிர் 1/2 கப், இவை மூன்றையும் ஒன்றாகக் ஊற்றி, உங்கள் வீட்டில் விஸ்க் இருந்தால், அதில் அடித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஒரு ஸ்பூன் வைத்து, நன்றாக முட்டை அடிப்பதுபோல் அடித்து கிளறிக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய், கடலெண்ணெய் கட்டாயம் ஊற்றக் கூடாது.

cream

இப்போது இந்தக் கலவையோடு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் ரவை சர்க்கரை கலவையை சேர்த்து, நன்றாக அடித்து கலக்க வேண்டும். இந்த கலவையை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை ஊற வைத்துவிடுங்கள். (அதாவது, பால், தயிர், எண்ணெய், சர்க்கரை, ரவை இந்த ஐந்து பொருட்களும் சேர்த்த கலவை.)

- Advertisement -

Step 3:
15 நிமிடங்கள் ஊறியதும், ரவை கொஞ்சம் இறுகிய பதத்திற்கு வந்திருக்கும். இப்போது தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையில், முந்திரி, உலர் திராட்சை இப்படி உங்கள் வீட்டில் நட்ஸ் வகைகள் இருந்தால், அதை சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக ஈனோ சால்ட் 5 கிராம், அளவு கேட்கில், கட்டாயம் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து 2 டேபிள் ஸ்பூன் பாலையும் இறுதியாக சேர்த்து, கலக்கி, கேக் மாவு தயார் பண்ணி வைத்து விடுங்கள்.

cacke-batter

Step 4:
இப்போது கேக்கை ஊற்றுவதற்கு, அடி அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அது அலுமினிய பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த பாத்திரத்திற்கு உள்பக்கத்தில், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, தடவி கோதுமை மாவையும் பரவலாகத் தூவி, தடவி விட வேண்டும். அதன் பின்பாக நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கேக் கலவையை பாத்திரத்தில் ஊற்றி, மேலே அலங்காரத்திற்காக முந்திரி திராட்சை நட்ஸ் வகைகளை தூவிக் கொள்ளலாம்.

- Advertisement -

cake

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு ஸ்டவ்வை சிம்மில் வைத்து விட்டு, தோசைக்கல்லில் மேலே, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கேக் பாத்திரத்தை வைத்து, ஒரு மூடி போட்டு, மூடி விடுங்கள். அவ்வளவுதான் 25 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரை அந்த கேக் வேகட்டும்.

20 நிமிடங்கள் கழித்து, மெல்லிய குச்சி ஏதாவது இருந்தால், அந்த கேக்கில் குத்தி பாருங்கள். குச்சியில் மாவு ஒட்டாமல் வரும். அப்போது, கேக் நன்றாக வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். கேக்கை அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக ஆற வைத்துவிடுங்கள். அதன்பின்பு கேக்கின் மேலே ஒரு தட்டை வைத்து, கேக்கை கவிழ்த்து, லேசாக தட்டி எடுத்தால், கேக் பாத்திரத்தில் ஒட்டாமல் தனியாக வந்துவிடும்.

cake1

அவ்வளவுதான். கத்தியை வைத்து கேக்கை பீஸ் போட்டு எடுத்தீர்கள் என்றால் அவ்வளவு சாஃப்டா, பேக்கரி கேக் போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்! உங்கள் குழந்தைகளுக்கு இந்த கேக் கட்டாயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிக்கலாமே
மசாலா பொருட்களை அரைத்து ஊற்றி, கமகம ‘வத்தக்குழம்பு’! ஒருவாட்டி, உங்க வீட்டுல இப்படி செஞ்சு பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -