பொடுகு பிரச்சனை தீர எளிய வழிமுறைகள்

podugu
- Advertisement -

ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைப்பது அவர்களின் வெளித்தோற்றத்தை பொறுத்துதான் என்பதை பலரும் அனுபவரீதியாக உணர்ந்திருப்பார்கள். அதனால் தான் இன்றைய காலகட்டத்தில் தங்களின் தோற்றம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல ஆயிரக்கணக்கில் செலவுகளும் செய்கிறார்கள். இப்படி செலவு செய்வதில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது தான் பொடுகு பிரச்சனை. இந்த பொடுகு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு சற்று கூச்சப்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்குரிய அற்புதமான பதிவாக தான் இந்த அழகு குறிப்பு பதிவு திகழப் போகிறது.

பொடுகு என்பது என்ன? நம் தலைப்பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு பாக்டீரியாவால் உருவாகக்கூடிய பிரச்சனைதான் பொடுகு. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொண்டால் பொடுகை முற்றிலும் நீக்க முடியும். அப்படி இல்லாமல் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் அது பெரியதாகி நம்முடைய தோள்பட்டை பகுதிகளில் உதிரும் அளவிற்கு மாறிவிடும்.

- Advertisement -

தலையை சுத்தமாக பராமரிப்பது தான் மிகவும் முக்கியமான காரணமாக திகழப்படுகிறது. தலைப்பகுதி வறண்டு போய் இருப்பதாலும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தலையில் இருக்கும் அழுக்கை நீக்காமல் இருந்தாலும் இந்த பொடுகு பிரச்சனை என்பது கண்டிப்பான முறையில் வரும். ஒரு முறை வந்து விட்டால் அதை நீக்குவது என்பது சிரமமான ஒன்றாக தான் இருக்கும்.

தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்க்கும் அளவிற்கு ஆப்பிள் சிட்ரிக் வினிகரை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொண்டால் அதற்கு சரிசமமாக இரண்டு ஸ்பூன் அளவிற்கு தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்த பிறகு தலை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து குறைந்தது பத்து நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு கெமிக்கல் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விட வேண்டும்.

- Advertisement -

எலுமிச்சை பழ சாறு பொடுகு பிரச்சனைக்கு மிகப்பெரிய அற்புதமான தீர்வை தரக்கூடிய ஒன்று. முதலில் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் எடுத்து அதை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு பண்ண வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் சம அளவு எலுமிச்சை பழச்சாறியும் கலந்து நன்றாக கலக்க வேண்டும். இது வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது தலைமுடியில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தலை முடியை அலசி விட வேண்டும்.

எலுமிச்சை பழத்தைப் போன்றே அதிக சிட்ரிக் நிறைந்த பழமாக ஆரஞ்சு பழம் திகழ்கிறது. இதில் அதிகமான சத்து இருக்கும் பகுதி என்றால் அது ஆரஞ்சு பழத்தின் தோல் தான். ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோலை மட்டும் உரித்து மிக்ஸி ஜாரில் போட வேண்டும். இதை பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும். அதற்கு எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை தலையில் ஹேர் மாஸ்காக உபயோகப்படுத்தி அரை மணி நேரம் கழித்து கெமிக்கல் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இளமையை தக்க வைக்க உதவும் வெண்டைக்காய் ஃபேஸ் பேக்

ஒரு பேக்கை மூன்று நாட்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் பொடுகு பிரச்சனை நீங்கும் வரை உபயோகப்படுத்த வேண்டும். தலையையும் தலைமுடியையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டால் தான் மறுபடியும் பொடுகு பிரச்சினை வராமல் இருக்கும்.

- Advertisement -