இளமையை தக்க வைக்க உதவும் வெண்டைக்காய் ஃபேஸ் பேக்

ladies finger face pack
- Advertisement -

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லை? அனைவரும் எவ்வளவு வயதானாலும் முகத்தை மட்டும் இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தானே ஆசைப்படுவார்கள். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு உதவக்கூடிய பொருளாக தான் வெண்டைக்காய் திகழ்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வெண்டைக்காயை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்து இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

இளமையை தக்க வைத்துக் கொள்ள பல பொருட்கள் இருந்தாலும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய வெண்டைக்காய் நம் முகத்தில் நாம் பயன்படுத்தும் பொழுது அது நமக்கு பல நன்மையை தருகிறது. வெண்டைக்காயை நாம் உணவாக உண்ணும் பொழுது அது எந்த அளவுக்கு நம் உடலுக்கு நன்மை தருகிறதோ? அதே அளவிற்கு அதை நாம் முகத்தில் தடவும் போது முகத்திற்கும் நன்மையை தருகிறது.

- Advertisement -

வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸைடு இருப்பதால் நம் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற கழிவுகளை நீக்க உதவுகிறது. மேலும் இதில் ஆண்டிபையாட்டிக் இருப்பதால் முகப்பருக்களை வரவிடாமல் தடுக்கிறது. அதோடு இதில் இருக்கும் வளவளப்பு தன்மையானது முகத்திற்கு இயற்கையான ஒரு மாய்சுரசாக செயல்படுகிறது.

வெண்டைக்காய் ஃபேஸ் பேக்

ஆறு வெண்டைக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது பிஞ்சாக இருப்பது மிகவும் நல்லது. அதை தண்ணீரில் கழுவி, காம்பு மற்றும் நுனியை நறுக்கி விட்டு சிறிது சிறிதாக நெருக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே அரைக்க வேண்டும். நன்றாக நைசாக அரைத்து விடுங்கள். பிறகு அதை ஒரு பவுலில் மாற்ற வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் எடுத்து அப்படியே தடவி மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் இது அப்படியே முகத்தில் இருக்கட்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாக கழுவுங்கள். இந்த வெண்டைக்காய் ஃபேஸ் பேக்கை நாம் வாரத்திற்கு மூன்று நாட்கள் முகத்தில் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற இறந்த செல்கள் அனைத்தும் நீங்குகிறது.

முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. பருக்கள் வராமல் தடுக்கிறது. கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் முகத்தின் நிறத்தையும் கூட்டுவதற்கு உதவுகிறது. அதோடு நிற்பதில்லை இதன் வேலை, முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்களையும் நீக்கி என்றும் இளமையாக இருப்பதற்கு பெருந்துணை புரிகிறது.

இதையும் படிக்கலாமே: முகப்பிரகாசத்தை தரும் ஃபேஸ் பேக்

மலிவாக கிடைக்கக்கூடிய வெண்டைக்காயை நாம் உணவாக எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைப் போல முகத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

- Advertisement -