இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்வது நம்முடைய கூந்தல் தான். இந்த கூந்தலை முறையாக சிறு வயதிலேயே பராமரித்து வந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கூந்தல் கடைசி வரை ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அப்படி முறையாக பராமரிக்காமல் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி ஏனோ தானோ என்று பார்த்துக் கொண்டால் கண்டிப்பாக முறையில் முடி உதிர்தல் என்பது ஏற்பட்டு முடி மெலிந்து போய்விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேங்காயை வைத்து எந்த முறையில் பயன்படுத்தினால் நம்முடைய இழந்த கூந்தலை திரும்பப் பெற முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது அனைவருக்கும் தினமும் நடக்கக்கூடிய ஒரு செயல் தான். ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் முடி உதிர்தல் இருக்கும் பட்சத்தில் அதனால் எந்த பாதிப்பும் கிடையாது. அதுவே ஒரு அளவுக்கு மேல் சென்று விட்டால் அதாவது 50 முடிகளுக்கு மேல் ஒரு நாளைக்கு முடி உதிர்தல் என்பது ஏற்பட்டால் அது ஏதோ ஒரு பிரச்சினையின் காரணமாக காரணமாகவே உதிர்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வளராமல் இருப்பதும் பிரச்சினைக்குரியதாகவே கருதப்படுகிறது. இப்படி இருப்பதால்தான் முடியும் அடர்த்தி என்பது குறைகிறது.
முடியின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் முடியை நீளமாக வளரச் செய்வதற்கும் தேங்காய் ஒரு மிகப்பெரிய அற்புதமான பொருளாக திகழ்கிறது. தேங்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் லாரிக் அமிலம் அதிகமாக உள்ளது. மேலும் புரதச்சத்து இதில் அதிக அளவில் இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய கொழுப்புகள் அனைத்துமே நல்ல கொழுப்புகளாக திகழ்கிறது.
இதோடு மட்டுமல்லாமல் தேங்காய் பாலை நம்முடைய தலையில் நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். மேலும் விட்டமின் சி, இ, பி1, பி3, பி5 மற்றும் பி6 போன்ற விட்டமின்கள் இதில் அதிக அளவு இருப்பதால் இவை அனைத்தும் நம்முடைய தலைமுடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இப்பொழுது தலைமுடியில் தேங்காயை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.
இதற்கு புதிதாக உடைத்த முழு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தேங்காயை கீறி மிக்ஸி ஜாரில் சேர்த்து வெதுவெதுப்பான நீர் ஒரு டம்ளர் அதில் ஊற்ற வேண்டும். சுடுநீரை ஊற்றக்கூடாது. வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய நீரை தான் ஊற்ற வேண்டும். இப்பொழுது இதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து கெட்டியான தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த தேங்காய் பாலை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி வைத்து ஃப்ரீசரில் 30 நிமிடம் வைக்க வேண்டும்.
30 நிமிடம் கழித்து அதை வெளியே எடுத்து விடலாம். 30 நிமிடத்திற்கு மேலே வைக்கக்கூடாது. இப்பொழுது தேங்காய் பாலின் கிரீம் மேலே கட்டியாக சேர்ந்திருக்கும். அடியில் அடியில் மீதம் இருக்கக்கூடிய தண்ணீர் அப்படியே இருக்கும். இந்த கிரீமை ஒரு ஸ்பூனை பயன்படுத்தி அப்படியே எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி நன்றாக அதை பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது தேங்காய் கிரீம் தயாராகிவிட்டது.
இந்த கிரீமை நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களிலிருந்து தலைமுடியின் நுனி வரை தடவி அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இப்படி நாம் தேங்காய் பால் கிரீமை தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் நம் தலை முடியின் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். முடி உதிர்தல் பிரச்சினை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முடி நீளமாக வளர ஆரம்பிக்கும். ஒருமுறை தயார் செய்த தேங்காய் பால் க்ரீமை நாம் பிரிட்ஜில் வைத்து மறுவாரமும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் பூ
பல அற்புத சத்துக்கள் நிறைந்த தேங்காயிலிருந்து தேங்காய் பால் க்ரீமை எடுத்து நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் நம் தலை முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஒருமுறை செய்து பார்த்தாலே நல்ல பலன் தெரியும். முயற்சி செய்து பாருங்கள்.