அட! இவ்வளவு தண்ணி பாலில் கூட கெட்டியான தயிர் அதுவும் ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணலாமா? இத கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இப்போதெல்லாம் பால், தயிர் என எல்லாமே கடைகளில் பாக்கெட்டில் அடைந்து விற்க தொடங்கி விட்டார்கள். என்ன தான் இருந்தாலும் நாம் வீட்டில் பால் காய்ச்சி உறை ஊற்றி சாப்பிடும் தயிர் போல அது வராது. அதே சமயம் என்ன நாம் என்ன தான் வீட்டில் உறையூற்றினாலும் கூட கடைகளில் கிடைப்பது போல அவ்வளவு கெட்டியான தயிர் கிடைப்பதில்லையே என்ற எண்ணம் வரத் தான் செய்கிறது. இந்த முறையில் பால் காய்ச்சி தயிறை உறை ஊற்றி பாருங்கள். தண்ணி பாலில் கூட கெட்டியான தயிர் கிடைக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தண்ணிப் பாலில் கெட்டித் தயிர் தயாரிக்கும் முறை:
இந்த முறை தயிர் உறைய வைக்க நீங்கள் எந்த பால் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சும் பாத்திரத்தை வைத்து அதில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பாலை ஊற்றி காய்ச்சல் தொடங்குங்கள்.

- Advertisement -

பால் ஒரு கொதி வரும் வரையில் கரண்டி வைத்து கலந்து கொண்டே இருங்கள். ஏனென்றால் ஆடை கட்டி ஒரு ஓரமாக ஒதுங்கி விட்டால் தயிர் கெட்டியாகாது. எனவே ஆடை கட்டாமல் இருக்க கொஞ்சம் பாலை கலந்து விட்டுக் கொண்டே இருங்கள். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து பாலை ஆற விடுங்கள். பால் உங்களுக்கு உடனே ஆற வேண்டும் என்றால் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் காய்ச்சிய பாலை வைத்து ஆற விடுங்கள். ஃப்ரிட்ஜில் வைத்து இதை ஆற வைக்க கூடாது.

இப்போது உங்களுக்கு உடனடியாக தயிர் தேவைப்படுகிறது என்றால், பால் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும் போதே தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு ஒரு ஹாட் பாக்சில் கொதிக்கும் நீரை ஊற்றிய பிறகு நீங்கள் கலந்து வைத்திருக்கும் இந்த பால் கிண்ணத்தை மூடி போட்டு அதன் உள்ளே வைத்து இறுக்கமாக மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது ஒரு மணி நேரம் அப்படியே வரை இருக்கட்டும். இந்த நேரத்தில் உங்க சமையல் வேலைகளை அனைத்தையும் முடித்து விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து திறந்து பாருங்கள் பால் நல்ல கெட்டியான தயிராக மாறி இருக்கும்.

இனி தயிர் உறை ஊற்ற உறை மோர் இல்லை என்றால் கூட, நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இப்படி காய்ச்சிய பாலில் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும் போதே ஒரு சின்ன பவுலில் கொஞ்சமாக பாலை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை ஊற்றி கலந்து வைத்து விடுங்கள். இதற்கு பதிலாக இரண்டு காய்ந்த மிளகாய் கூட காம்பு நீக்காமல் போடலாம். இதற்கு பச்சை மிளகாய் கூட பயன்படுத்தலாம்.

- Advertisement -

இப்படி உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒன்றை போட்டு எட்டு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் பால் கெட்டி தயிராகி விடும்.

இதையும் படிக்கலாமே: செப்பு பாத்திரங்களை இந்த முறையில் பராமரித்தால், பாத்திரங்கள் கறுத்துப் போய் அடிக்கடி தேய்க்க வேண்டிய அவசியமே இருக்காது.

இனி கெட்டி தயிர் உடனடியாக வேண்டுமென்றாலும் தயார் செய்து விடலாம். உங்களிடம் உறைமோரே இல்லை என்றாலும் நீங்களே அதை தயார் செய்து கொள்ளலாம். நீங்களும் உங்கள் வீட்டில் இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.

- Advertisement -