வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஃபேஸ் க்ரீம்

dry skin
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அந்த சருமத்திற்கு ஏற்றார் போல் நாம் ஃபேஸ் க்ரீமோ, ஃபேஸ் பேக்கோ பயன்படுத்தினால் தான் அதற்குரிய முழுமையான பலனை நம்மால் தர முடியும். தங்களுடைய சருமம் எப்படிப்பட்ட சருமம் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் நாம் பேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வறண்ட சருமத்திற்குரிய ஒரு ஃபேஸ் கிரீமை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

வறண்ட சருமம் மிகுந்தவர்களுக்கு இயற்கையிலேயே சருமத்திற்குரிய ஈரத்தன்மை என்பது இல்லாமல் இருக்கும். இந்த சருமம் இருப்பவர்களுக்கு எளிதிலேயே சரும பாதிப்புகள் என்பது ஏற்படும். அவர்கள் அடிக்கடி தங்களுடைய சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாப்பதற்காக மாய்ஸ்டரைசரை உபயோகப்படுத்த வேண்டும். இல்லையெனில் சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு அதனால் பாதிப்புகள் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு உரிய ஒரு இயற்கையான மாய்ஸ்டரைசரையும் அந்த மாய்ஸ்டரைசரை பயன்படுத்துவதன் மூலம் அவர்களுடைய முகம் அழகாகவும் பொலிவாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கும். அப்படிப்பட்ட மாய்ஸ்டரைசரை எப்படி வீட்டில் மிகவும் எளிமையான முறையில் செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த மாய்ஸ்டரைசருக்கு நமக்கு தேவைப்படும் பொருளானது தேங்காய். இதை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இளமையான தோற்றத்தை பெற முடியும் என்று கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த பெண்களும் ஆண்களும் இளமையாக இருப்பதற்கு காரணம் அவர்கள் அதிக அளவில் தேங்காயை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதுதான் என்று பலரும் கூறுகிறார்கள். மிகவும் அற்புதமான சத்துக்கள் நிறைந்த தேங்காயிலிருந்து தான் இந்த ஃபேஸ் க்ரீமை நாம் தயார் செய்ய போகிறோம்.

முதலில் இதற்கு அரை முடி தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தேங்காயை கீறி சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த தேங்காய் விழுதை ஒரு காட்டன் துணியை பயன்படுத்தியோ அல்லது வடிகட்டியை பயன்படுத்தியோ வடிகட்டி அதில் இருந்து தேங்காய் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த தேங்காய் பாலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஒரு நாள் முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். மறுநாள் இந்த தேங்காய் பாலை எடுத்து பார்க்கும் பொழுது அடியில் நாம் சேர்த்த தண்ணீர் தனியாக இருக்கும். மேலே கிரீம் கிடைக்கும். இந்த கிரீமை மட்டும் நாம் தனியாக எடுத்து ஒரு கன்டெய்னரில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் முகத்திற்கு தேவையான இயற்கையான மாய்ஸ்டரைசர் தயாராகிவிட்டது.

இரவு படுக்க செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த கிரீமை முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்த கொள்ள வேண்டும். இந்த கிரீமை முகத்திற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. உடல் முழுவதுமே இதை உபயோகப்படுத்தலாம். இப்படி நாம் பயன்படுத்திவிட்டு படுக்கச் சென்று விட வேண்டும். மறுநாள் காலையில் இருந்து முகத்தை எப்பொழுது போல் கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் முகத்திற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஈரத்தன்மை என்பது கிடைக்கும்.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் இதில் விட்டமின் சி, இ இருப்பதால் இது முகத்தை மிகவும் பொலிவாகவும் அழகாகவும் இளமையாகவும் வயதான தோற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லை நீங்க பூந்திக்கொட்டை

மிகவும் எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த தேங்காய் பேஸ் கிரீமை வறண்ட சருமம் இருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி முகத்தை பொலிவுடன் அழகாகவும் பராமரித்து கொள்ள முடியும்.

- Advertisement -