கருமையான கூந்தலை பெற உதவும் எண்ணெய்

black hair oil
- Advertisement -

தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான அதேசமயம் இந்த தலைமுறையினரை பாதிக்கக்கூடிய பிரச்சினையாக திகழ்வதுதான் இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சனை. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையான, இயற்கையான பொருட்களை மட்டுமே வைத்து தயார் செய்யக்கூடிய ஒரு எண்ணையை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக தலைமுடியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமாக கருதப்படக் கூடிய இந்த இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சனை பல காரணங்களால் ஏற்படக்கூடும் என்றாலும் தலைமுடியை முழுமையாக ஒழுங்காக பராமரிக்காதது மிகப்பெரிய காரணமாக திகழ்கிறது. சிறுவயதில் இருந்தே தலைக்கு முறையாக எண்ணெய் தேய்த்து பராமரிப்பதன் மூலம் தலையில் இருக்கக்கூடிய சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படும். இதனாலேயே முடி உதிர்தல் பிரச்சினை என்பது குறைய ஆரம்பிக்கும். மேலும் ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவுப் பொருட்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுதும் முடி உதிர்தல் மற்றும் இளநரை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

இந்த எண்ணையை தயார் செய்வதற்கு முதலில் ஒரு இரும்பு கடாயை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். கடாய் சூடான பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த இந்த கருஞ்சீரகத்தை எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு அதே இரும்பு கடாயில் நெல்லிக்காய் பொடி 3 டேபிள் ஸ்பூன் போட்டு அது கருகும் அளவிற்கு நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த இந்த பொடியையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே வருத்து வைத்திருக்கும் கருஞ்சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கருஞ்சீரகப் பொடி, மருதாணி இலை பொடி இரண்டு ஸ்பூன், அவுரி இலை பொடி இரண்டு ஸ்பூன், நெல்லிக்காய் பொடி இவை அனைத்தையும் சேர்த்து இதனுடன் 150 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

- Advertisement -

அனைத்து எண்ணெயையும் ஊற்றி கிளறிய பிறகு டபுள் பாய்லிங் மெத்தடின் அடிப்படையில் எண்ணெயை நன்றாக குறைந்தது 10 நிமிடமாவது சூடு பண்ண வேண்டும். பிறகு இந்த எண்ணெயை அப்படியே தனியாக எடுத்து வைத்து அது நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த எண்ணையை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் போட்ட பொடிகள் அனைத்தையும் எடுத்து நாம் தலைக்கு குளிக்கும் நாள் அன்று தலையில் ஹேர் மாஸ்காக போட்டு அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விடலாம்.

இந்த எண்ணையை தினமும் நாம் நம்முடைய தலையில் தடவும் பொழுது நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது படிப்படியாக குறைய ஆரம்பித்து முற்றிலும் நின்றுவிடும். அதேபோல் இளநரை பிரச்சினையும் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். புதிதாக வளரக்கூடிய முடிகள் கருமையாக வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: கருமையை நீக்கும் ஃபேஸ் க்ரீம்

அரை மணி நேரம் மட்டுமே செலவு செய்து ஒரு அற்புதமான தேங்காய் எண்ணெயை தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் நம் தலைமுடியின் பிரச்சனை தீர்ந்து விடும்.

- Advertisement -