தலை முடி பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் தேங்காய் எண்ணெய்

homemade hair oil
- Advertisement -

மனித உடலுக்கு சிரசே பிரதானம் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தலைக்கு அழகை சேர்க்கக்கூடிய ஒன்றாக தான் தலைமுடி திகழ்கிறது. தலைமுடி என்பது நம்முடைய தலையில் இருக்கக்கூடிய பாகங்களை பாதுகாப்பதற்காக படைக்கப்பட்டது என்றாலும் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறோமா இல்லையா என்பதையும் அன்றைய காலத்தில் நம்முடைய தலைமுடியை வைத்தே அறிந்தனர். அந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக தான் தலை முடி திகழ்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் தலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு உதவக்கூடிய எண்ணையை எப்படி தயார் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி உதிர்தல், பொடுகு பிரச்சனை, பேன் பிரச்சனை, முடி வளராமல் இருப்பது, இப்படி பலவற்றை தலைமுடி பிரச்சனையாக கூறலாம். இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் நரை முடி பிரச்சனை. இது இளநரையாக இருந்தாலும் சரி முதிர் நரையாக இருந்தாலும் சரி அவற்றை சரி செய்ய வேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுகிறார்கள். இப்படி மேல் சொன்ன அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்குரிய ஒரு எளிமையான எண்ணையை தயாரிக்கும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த எண்ணெயை தயாரிப்பதற்கு நமக்கு அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் தேவைப்படும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் இருந்து சில பொடிகளை வாங்கி வர வேண்டும். அவை நெல்லிக்காய் பொடி, வேப்பிலை பொடி, கருவேப்பிலை பொடி கரிசலாங்கண்ணி பொடி. இதில் இருக்கக்கூடிய எல்லா பொடிகளையும் நாம் வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். இயலாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்க வேண்டும். வீட்டிலேயே தயார் செய்வதாக இருந்தால் இவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி நேரடியாக வெயிலில் படாமல் நிழலில் உலர்த்தி பிறகு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடிகளுடன் சேர்த்து நமக்கு மேலும் தேவைப்படும் ஒரு பொடி தான் வெந்தய பொடி. வெந்தயத்தை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த எண்ணெயை தயாரிப்பதற்கு இரும்பு கடாய் இருந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இந்த பொடிகளில் ஒவ்வொரு பொடியிலும் இரண்டு ஸ்பூன் வீதம் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இப்படி சேர்த்து விட்ட பிறகு அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அந்த இரும்பு கடாயிலேயே இந்த எண்ணெய் இருக்கட்டும். மறுநாள் ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து நாம் உபயோகப்படுத்த ஆரம்பிக்கலாம்.

சாதாரணமாக தினமும் தலைக்கு வைப்பதற்கும் இந்த எண்ணையை நாம் பயன்படுத்தலாம் அல்லது குளிக்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்த பிறகு குளிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ணெயை தொடர்ச்சியாக ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதம் வரைக்கும் உபயோகப்படுத்த தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைவதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: வறண்ட சருமத்தை பொலிவாக்கும் ஃபேஸ் க்ரீம்

கெமிக்கல் நிறைந்த கடைகளில் விற்கக் கூடிய தேங்காய் எண்ணெயை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக ஆரோக்கியமான பொருட்களை நாமே வாங்கி நாமே தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை நம்மால் பெற முடியும்.

- Advertisement -