இந்த ஒரு ஹேர் சீரம் உபயோகித்தால் தலை முடி பிரச்சனை அனைத்தும் தீரும்.

hair serum
- Advertisement -

தலைமுடி உதிர்தல் பிரச்சனையும், முடிகள் உதிர்ந்த இடத்தில் புதிதாக முடிகள் வளரவும் நாம் பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அதற்கான செயல்பாடு முறைகளும் சிறிது கடினமாக தான் இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் இந்த அழகு குறிப்பில் ஒரே ஒரு ஹேர் சீரம் தயார் செய்து வைத்துக் கொள்வது மட்டும்தான் நம் வேலையாக இருக்கும். வேறு எந்த கஷ்டமும் பட வேண்டியது இல்லை.

ஆமாங்க முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கதற்காக ஹேர்பேக் தயார் செய்கிறது அதை தலைக்கு தேய்க்கிறது அப்புறம் அதை ஊற வச்சு தலைக்கு குளிக்கிறது இப்படி பல வழிமுறைகள் நம்ம பார்த்திருப்போம். ஆனால் இவ்வளவு சிரமங்களை படாம நம்ம டெய்லி ரெண்டு வேளை இந்த ஹேர் சீரமை நம்ம தலையில தேச்சிட்டு வந்தோன்னாலே போதும். மறுபடியும் குளிக்கணும்னு அவசியம் கிடையாது. ஒரே வாரத்துல முடி உதிர்ந்த இடங்களில் புதுசு புதுசா குட்டி குட்டியா முடிகள் வளர ஆரம்பிச்சுரும்.

- Advertisement -

இந்த முறையை தான் ஜாப்பன் மற்றும் இந்தோனேஷியாவில் இருக்கிறவங்களும் பின்பற்றுகிறார்கள் என்று கூறப்படுத்து. இதுக்கு நமக்கு மூணே மூணு பொருட்கள் தான் தேவைப்படும். அது கிராம்பு, கருஞ்சீரகம் அப்புறம் மிளகு.

கிராம்புல இருக்கக்கூடிய ஒருவகையான எண்ணெய் நம்முடன் தலைமுடியில் இருக்கக்கூடிய முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கதற்கு உதவுதுன்னு சொல்லப்படுது. கருஞ்சீரகத்தை பத்தி கேட்கவே வேணாம். முடி வளர்ச்சியை தூண்டுவதற்கான ஒரு அற்புதமான பொருளாக கருஞ்சீரகம் இருக்கு. அது மட்டும் இல்லாமல் இளநரை ஏற்படுவதை தடுப்பதற்கும் கருஞ்சீரகம் உதவுகிறது. மூன்றாவதாக நாம் எடுத்ததுதான் மிளகு. மிளகை நாம் தலையில் பயன்படுத்தும் பொழுது தலைக்கு ரத்த ஓட்டமானது அதிகமாக கிடைக்கும். மேலும் சளி பிடிப்பது போன்ற பிரச்சனைகளும் வராமல் தடுக்கப்படுகிறது. இப்போ இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தில் நாலு கிளாஸ் தண்ணி ஊத்திக்கோங்க. அதுல ரெண்டு ஸ்பூன் அளவுக்கு கிராம்பு, ஒரு ஸ்பூன் அளவுக்கு கருஞ்சீரகம், அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்துக்கோங்க. சேர்த்துட்டு இதை குறைந்த தீயில வச்சு 30 நிமிடம் அடுப்புல அப்படியே வச்சுக்கோங்க. இந்த நாலு கிளாஸ் தண்ணிங்கறது ரெண்டு கிளாஸ் மாறனும். அந்த அளவுக்கு அடுப்புலயே வச்சிருக்கணும்.

வற்றிய பிறகு அத ஆரவச்சு ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊத்தி வச்சுக்கோங்க. இப்போ இந்த ஸ்ப்ரே பாட்டில்ல இருக்கிற தண்ணிய நம்ம தலையில ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ஸ்ப்ரே பண்ணி முடிஞ்சா ஒரு அஞ்சு நிமிஷம் மசாஜ் பண்ணிக்கோங்க. முடியலன்னா அப்படியே விட்ருங்க. ஸ்ப்ரே பண்ணிட்டு தலையை மட்டும் சீவிடுங்க போதும். தலைக்கு குளிக்கணும் என்கிற அவசியம் கிடையாது. ஊற வைக்கணும்னு அவசியம் கிடையாது. எதுவுமே பண்ண வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: ஒரு வாரத்தில் நரை முடியை எல்லாம் கருப்பாக மாற்றும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்வது எப்படி?

இந்த மாதிரி நீங்க ஒரு வாரம் செஞ்சுட்டு வாங்க கண்டிப்பான முறையில் முடி உதிர்தல் குறைஞ்சிடும். முடி உதிர்ந்த இடத்தில குட்டி குட்டியா புது முடிகள் வளர ஆரம்பிக்கும். இளநரை ஏற்படுவது என்பது தவிர்க்கப்படும். முடி ரொம்ப ஆரோக்கியமா ஸ்ட்ராங்கா இருக்கும்.

- Advertisement -