முடியை வேகமாக வளரச் செய்ய உதவும் சீரம்

long hair seram
- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய தலைமுடியில் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சனைகளை நாம் அலசி ஆராய்ந்து அதற்கேற்றார் போல் சிகிச்சை மேற்கொண்டால் தலைமுடி பிரச்சனை என்பது முற்றிலும் நீங்கும். அப்படி தலைமுடி பிரச்சனை நீங்கினாலும் மறுபடியும் தலைமுடி வளர வேண்டும் என்றால் அதற்காக தனியாக நாம் சில சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இவை அனைத்தையும் தவிர்த்து ஒரே ஒரு சீரமை மட்டும் நாம் உபயோகப்படுத்தினால் நம் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நம் தலை முடியும் வேகமாக வளரும். அந்த சீரம் எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நம் தலை முடியை பராமரிப்பதற்காக நாம் பல வழிமுறைகளை மேற்கொள்வோம். தலைக்கு எண்ணெய் தேய்ப்பது, தலைக்கு ஹேர் மாஸ்க் போடுவது, தலைக்கு உபயோகப்படுத்தும் ஷாம்புவை தேர்வு செய்வது, தலைக்கு கண்டிஷனர் போடுவது என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி நாம் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஒரு சீரம் இருக்கிறது. அந்த சீரம் நம் தலை முடியின் பிரச்சினைகள் அனைத்தையும் நீக்க உதவக்கூடிய அற்புதமான சீரமாக திகழ்கிறது. அந்த சீரத்தை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

நாம் எந்த எண்ணெயை உபயோகப்படுத்தினாலும், எந்த ஹேர் பேக்கை உபயோகப்படுத்தினாலும், எந்த ஷாம்புவை உபயோகப்படுத்தினாலும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த சீரத்தை நம் தலையில் தடவி மசாஜ் செய்தால் போதும். நம் தலை முடி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும்.

இந்த சீரத்தை நாம் தயார் செய்வதற்கு நமக்கு 2 ஸ்பூன் வெங்காய சாறு தேவைப்படும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அளவு சோற்றுக்கற்றாழை ஜெல் தேவைப்படும். இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய கற்றாழையாக இருந்தால் அது மிகவும் சிறப்புக்குரியது. அதை அரைத்து வடிகட்டி அதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக இதனுடன் நாம் ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை சேர்க்க வேண்டும். இதேபோல் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயும் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சீரம் தயாராகிவிட்டது. இதில் சேர்த்திருக்கும் வெங்காய சாறு நம் தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடியை வளரத் தூண்டும் அற்புதமான ஒரு பொருளாக திகழ்கிறது. கற்றாழை நம் உடலின் சூட்டினாலோ அல்லது பொடுகு தொல்லைகளாலும் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் வல்லமை இருக்கிறது.

இதே போல் ஆமணக்கு எண்ணெயும் நம் உடலின் சூட்டை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் முடியை கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரச் செய்ய உதவுகிறது. தேங்காய் எண்ணெய் தலைமுடியின் வறட்சியை நீக்கி தலைமுடிக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்களை தருகிறது. இவை அனைத்தையும் நாம் ஒன்றாக சேர்த்து கலந்து நம் வேர்க்கால்களில் தேய்த்து 5 நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்து பிறகு சாதாரண தண்ணீரை ஊற்றி அலசி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நாம் செய்தாலே போதும். நம் தலை முடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி புதிய முடிகள் வளர்வதோடு அந்த முடிகள் கருமையாகவும் வளரும்.

இதையும் படிக்கலாமே: உச்சி முதல் பாதம் வரை அழகாக வல்லாரை

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் தலை முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

- Advertisement -