செம்பருத்தி ஃபேஸ் க்ரீம்

sembaruthi face cream
- Advertisement -

வயதான பெண்மணிகள் கூட தங்களுடைய முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அப்படி பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் அவர்களின் முகத்தில் எந்தவித கரும்புள்ளிகளும் மாசு மருக்களும் இருக்கக் கூடாது. இப்படி கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்வதற்கும் இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு பொருளை வைத்து எப்படி ஃபேஸ் க்ரீம் தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

நம்முடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல பொருட்களை வைத்து கரும்புள்ளிகளை நம்மால் நீக்க முடியும். அதே சமயம் கெமிக்கல் நிறைந்த பொருட்களும் பல இன்றைய காலத்தில் கிடைக்கிறது. இயற்கையிலேயே நம்முடைய வீட்டிலேயே நாம் ஃபேஸ் க்ரீன் தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் க்ரீமை தயார் செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு பொருளாக நாம் உபயோகப்படுத்துவது தான் செம்பருத்திப்பூ. செம்பருத்திப்பூவில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. செம்பருத்தி பூவை நாம் டீயாகவும் அருந்தலாம். தலைக்கு ஹேர் பேக்காகவும் உபயோகப்படுத்தலாம். இதே போல் தான் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் செம்பருத்திப்பூ உதவுகிறது.

10 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து தண்ணீரை ஊற்றி சுத்தமாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த இதழ்களில் 100 எம்எல் தண்ணீரை ஊற்றி மூன்று நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். பிறகு இந்த சாரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இயற்கையிலேயே கிடைக்கக் கூடியது சோற்றுக்கற்றாழை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஒரு ஸ்பூன் அளவு வரும் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பவுலின் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதை நன்றாக கட்டியில்லாத அளவிற்கு செம்பருத்தி பூ சாரை வைத்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது கலந்த இந்த அரிசி மாவை அடுப்பில் வைத்து கெட்டியாக வரும் அளவிற்கு கிண்ட வேண்டும். நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் சோற்றுக்கற்றாழை ஜெல்லில் மறுபடியும் ஒரு ஸ்பூன் அளவிற்கு பன்னீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இது நன்றாக கலந்த பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு செம்பருத்தி பூ சாரையும் ஊற்றி நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் அரிசி மாவு விழுதை இதில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். செம்பருத்தி பூ ஃபேஸ் க்ரீம் தயாராகிவிட்டது. இந்த ஃபேஸ் க்ரீமை இரவு படுக்க செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவி விட்டு ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கிரீமை நம்முடைய முகத்திலும் கழுத்திலும் பரவலாக தடவி ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கிரீமை தினமும் நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும். இறந்த செல்கள் நீங்கும். மேலும் முகம் பிரகாசமாக தென்படும்.

இதையும் படிக்கலாமே: கை கால் கருமை நீங்க

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் மிகுந்த இந்த பொருட்களை பயன்படுத்தி நாமே நம் வீட்டில் நம் கைப்பட ஃபேஸ் க்ரீம் தயார் செய்வதன் மூலம் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் அழகாக மாற முடியும்.

- Advertisement -