கை கால் கருமை நீங்க

sun tan removal
- Advertisement -

வீட்டை விட்டு வெளியில் செல்பவர்களாக இருந்தாலும் சரி, வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகத்தை விட கை கால்களில் கருமை நிறம் அதிகமாக இருக்கும்.காரணம் முகத்திற்கு பல பராமரிப்புகளை செய்பவர்கள் கை, கால்களை மறந்து விடுவது தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முகத்தில் இருக்கும் நிறம் கை கால்களுக்கும் வர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் உடல் முழுவதும் சீரான நிறத்தை பெற வேண்டும் என்று விரும்புபவர்களும் எந்த பேக்கை பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

குழந்தைகள் வெயிலில் சென்று விளையாடிவிட்டு வீடு திரும்பும் பொழுது உடைகள் இருக்கும் இடம் நன்றாகவும் வெயில் பட்ட இடம் கருப்பாகவும் இருக்கும். இது சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமை. இந்த கருமையை நீக்குவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் ஒரே பயன்பாட்டில் நல்ல பலனை பெறுவதற்குரிய ஒரு எளிமையான பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

முதலில் நாம் எந்த இடத்தில் பேக்கை அப்ளை செய்யப் போகிறோமோ அந்த இடத்தை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஈரம் இல்லாமல் துடித்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பவுலில் இரண்டு ஸ்பூன் அளவு காபித்தூளை போட வேண்டும். அதனுடன் இரண்டு ஸ்பூன் அளவு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வருவதற்கு இதனுடன் எலுமிச்சை பழச்சாறு அல்லது பன்னீர் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். இது ஒரு ஸ்கிரப்பர் போல் நம்முடைய தோலில் செயல்படும். இதை நாம் நம்முடைய கைகளில் நன்றாக தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிந்த நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலமே நம்முடைய தோலின் நிறத்தில் ஒரு மாற்றத்தை காண முடியும். மேலும் நம்முடைய தோல் மிகவும் மிருதுவாக தென்படும்.

- Advertisement -

அடுத்ததாக பேக் தயார் செய்வது பற்றி பார்ப்போம். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் காபித்தூள் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து மேலும் இது பேஸ்ட் பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு தயிரையும் ஊற்றி நன்றாக பேஸ்ட் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த பேஸ்ட்டை நம்முடைய கைகளில் நன்றாக தடவ வேண்டும். இதை அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய கை, கால்களில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்கி நல்ல நிறம் மேம்படும். மேலும் மிருதுவான கைகளையும் நம்மால் பெற முடியும். இந்த பேக்கை வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற வீதம் செய்து வருவதன் மூலம் கருமை முற்றிலும் நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: ஒரே வாரத்தில் குதிகால் பிரச்சனை சரியாக

கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் நம்முடைய முகத்திற்கு இணையான நிறத்தை கைகளிலும் கால்களிலும் பெற முடியும்.

- Advertisement -