பளபளப்பாக பாத்திரம் தேய்க்க வீட்டிலேயே லிக்விட் தயார் செய்யும் முறை

vessels-cleaning
- Advertisement -

பெரும்பாலும் பாத்திரத்தை தேய்ப்பதற்கு நாம் கடைகளில் இருந்து தான் பாத்திரம் தேய்க்கும் சோப்பு அல்லது லிக்விட் வாங்குவோம். ஆனால், இன்று எந்த கெமிக்கலும் சேர்க்காமல் நம்முடைய வீட்டிலேயே பாத்திரம் தேய்க்க லிக்விட் எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய வீட்டு குறிப்பு தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த லிக்விடை கொண்டு பாத்திரம் தேய்த்தால் பாத்திரத்தில் அழுக்கு பிசுபிசுப்பு சீக்கிரம் நீங்குவதோடு சேர்த்து உங்களுடைய கைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

பாத்திரம் தேய்க்க லிக்விட் தயார் செய்யும் முறை

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். பூந்திக்கொட்டை 6 லிருந்து 7, எலுமிச்சம் பழம் 5, நல்ல தண்ணீர் 1/2 லிட்டர், கல் உப்பு 2 டேபிள் ஸ்பூன், வினிகர் 100 ml, பேக்கிங் சோடா 2 டேபிள் ஸ்பூன். இதற்கு உப்பு தண்ணீர் பயன்படுத்தக்கூடாது குடிக்கிற நல்ல தண்ணீர் பயன்படுத்தணும். தேவையான பொருட்கள் இவ்வளவுதான்.

- Advertisement -

எலுமிச்சம் பழச்சாறை நீங்கள் பயன்படுத்திய பிறகு, அந்த தோல் இருக்கும் அல்லவா, ஐந்து பழத்தின் தோல்களை எடுத்துக் கொண்டால் கூட போதும். முழு எலுமிச்சம் பழத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. முந்தைய நாள் இரவே பூந்தி கொட்டைகளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடவும். மறுநாள் காலை ஒரு குக்கரை எடுத்துக்கோங்க.

அதில் ஊறிய பூந்தி கொட்டைகள், எலுமிச்சம்பழம் இந்த இரண்டு பொருட்களும் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி ஐந்து விசில் விட்டால் போதும். இந்த பொருட்கள் எல்லாம் வெந்து சாஃப்டாக நமக்கு கிடைத்துவிடும். இது நன்றாக ஆரிய பிறகு, பூந்திக்கொட்டையை பிரித்து அதன் உள்ளே இருக்கும் கருப்பு கொட்டையை தூக்கிப் போட்டுடுங்க.

- Advertisement -

தோல் மட்டும் நமக்கு போதும். மிக்ஸி ஜாரில் குக்கரில் வெந்திருக்கும், எலுமிச்சம் பழத்தோல், பூந்திக்கொட்டையின் தோலை போட்டு மொழுமொழுன்னு அரைச்சிருங்க. பிறகு இந்த குக்கரில் இருக்கும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைத்து இதை நன்றாக வடிகட்டி எடுக்க வேண்டும்.

ஒரு ஸ்டீல் வடிகட்டியில் ஊற்றி ஒரு ஸ்பூனை வைத்து கலந்து வடிகட்ட வேண்டும். தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊற்றி கலந்து வடிகட்டினால் சக்கை தனியாக, சாறு தனியாக நமக்கு கிடைத்துவிடும். நாம் எடுத்திருக்கும் பொருட்களுக்கு 1/2 லிட்டர் தண்ணீர் போதுமானதாக இருக்கும்.

- Advertisement -

இப்போது வடிகட்டி வைத்திருக்கும் இந்த லிக்விடை அப்படியே ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். சூடாகும்போது இதில் உப்பு 2 டேபிள் ஸ்பூன், வினிகர் 100 ml, ஊற்றி நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். 5 லிருந்து 10 நிமிடங்கள் கொதிக்க விட்டால் போதும்.

இது நன்றாக ஆறிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை இதில் சேர்த்து கலந்து நுரை அடங்கியவுடன், இதை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 3 மாதங்களுக்கு மேலே கூட கெட்டுப் போகாமல் இருக்கும். தேவையான அளவு லிக்விடை கிண்ணத்தில் ஊற்றி, வெறும் ஸ்பாஞ்ச் நாரில் தொட்டு பாத்திரம் தேய்க்க பயன்படுத்த வேண்டியதுதான்.

இதையும் படிக்கலாமே: காலியான பேஸ்ட் கவரக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் அடங்கி இருக்குதா?

இந்த கடைகளில் வாங்கும் பாத்திரம் தேய்க்கக்கூடிய லிக்விட் வாசனையை விட, இதிலிருந்து வரும் வாசனையும் நன்றாக இருக்கும். இந்த லிக்விடை கொண்டு பாத்திரம் தேய்த்தால் பாத்திரங்கள் பளபளப்பாகவும் மாறும். இந்த எளிய வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -