ஹோட்டல் ஸ்டைல் முட்டை கோஸ் பொரியல் செய்வது இவ்வளவு ஈசியா? இனி இப்படித்தான் முட்டைகோசுப் பொரியல் செய்யணும்!

mutta-kose-cabbage-poriyal
- Advertisement -

ஹோட்டல் ஸ்டைல் முட்டை கோஸ் பொரியல் எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அதையே வீட்டில் செய்வதாக இருந்தால் யாரும் முட்டைகோஸ் பொரியலை அதிகம் விரும்புவது கிடையாது. முட்டைகோஸ் பொரியல் ரொம்பவே சுலபமாக ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி எளிதாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

ஹோட்டல் ஸ்டைல் முட்டைகோஸ் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, பாசி பருப்பு – கால் கப், முட்டைகோஸ் – கால் கிலோ, தேங்காய்த் துருவல் – கால் கப்.

- Advertisement -

ஹோட்டல் ஸ்டைல் முட்டைக்கோஸ் பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் முட்டை கோஸை சுத்தம் செய்து மெல்லியதாக பொடிப்பொடியாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். உதிரி உதிரியான இந்த முட்டைக்கோசை நிறம் மாறாமல் அப்படியே செய்வதற்கு நீங்கள் அடுப்பை எப்பொழுதும் குறைந்த தீயில் வைத்து இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாசிப் பருப்பை கழுவி நன்கு சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு தேங்காயை நன்கு துருவலாக துருவிக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி தாளித்துக் கொள்ளுங்கள். இரண்டு பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை இவற்றுடன் சேர்த்து காரத்திற்கு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் தோலுரித்து பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் லேசாக வதங்கினால் போதும், அதிகம் வதங்க வேண்டிய அவசியமில்லை. வெங்காயம் வதங்குவதற்கு அரை உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்துள்ள பாசிப் பருப்பை தண்ணீரை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை நன்கு கலந்து விட்ட பின்பு நறுக்கி வைத்துள்ள முட்டை கோசு சேர்க்க வேண்டும். முட்டைகோஸை சேர்த்த பின்பு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். முட்டைகோஸை நீர் விடும் தன்மை கொண்டுள்ளதால் நீங்கள் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

முட்டைக்கோசை இரண்டு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு குறைந்த தீயில் வைத்தே மூடி வைத்துக் கொள்ளுங்கள். 8 லிருந்து 10 நிமிடத்திற்குள் முட்டைகோசு பூப்போல வெந்து வந்திருக்கும். முட்டைக்கோசு அதிகம் வேகவும் கூடாது, குறைந்து வெந்து விடவும் கூடாது. சரியான பதத்திற்கு வெந்து இருந்தால் தான் சுவையாக இருக்கும். இறுதியாக நீங்கள் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பிலிருந்து இறக்கி சுடச்சுட சாதத்துடன் பரிமாறினால் ஹோட்டலில் பரிமாறுவது போலவே முட்டைகோஸ் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -