ஹோட்டல் ஸ்டைலில் பூரியை நல்லா புசுபுசுன்னு எண்ணெயை குடிக்காம சூப்பரா சுட இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ண போதும். காலையில சுட்ட பூரி நைட்டு வரைக்கும் கூட அப்படியே புசுபுசுன்னு இருக்கும்.

poori
- Advertisement -

டிபன் வகைகளிலே குழந்தைகளின் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உணவுகளில் பூரிக்கு முக்கிய இடம் என்றே சொல்லலாம். பெரியவர்களும் என்ன தான் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று நினைத்து சாப்பிட்டாலும் கூட பூரி என்றால் அதில் ஒருவித ஆசை இருக்க தான் செய்யும். அப்படியான இந்த பூரியை நாம் வீட்டில் செய்வதை விட ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் போது இன்னும் அதிக ருசியுடன் இருப்பதை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். அதே போன்று ஒரு ருசியில் வீட்டிலும் எப்படி செய்யலாம் என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருள்கள்

  • கோதுமை மாவு – 2 கப்
  • உப்பு – 1/2 ஸ்பூன்
  • சர்க்கரை -1 டேபிள் ஸ்பூன்
  • ரவை – 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – பூரி பொரிக்க தேவையான அளவு

செய்முறை

இந்தப் பூரி செய்வதற்கு முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு, சர்க்கரை, ரவை மூன்றையும் கலந்த பிறகு தண்ணீர் சேர்க்காமல் ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மாவில் சர்க்கரை சேர்க்கும் பொழுது பூரிக்கு நல்ல ஒரு நிறத்தை கொடுக்கும். ரவை நீங்கள் பூரி சுட்டு வெகு நேரம் வரையில் அதை புசுபுசுவென்று அப்படியே வைத்திருக்கும். இப்போது இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மாவின் மேல் லேசாக எண்ணெய் தடவி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த மாவை நாம் சப்பாத்திக்கு ஊற விடுவது போல அதிக நேரம் ஊற விடக் கூடாது மாவு பிசைந்து சில நிமிடத்திற்குள்ளாகவே பூரியை சுட்டு விட வேண்டும் அப்போது தான் பூரி நல்லா புசுபுசுவென்று வரும். இப்போது தயார் செய்து வைத்த மாவிலிருந்து நீங்கள் பூரி சுடும் அளவிற்கு ஏற்றார் போல சின்ன சின்ன உருண்டைகளாக மாவை உருட்டிக் கொள்ளுங்கள். அடுத்து சப்பாத்தி திரட்டும் கட்டையில் இந்த உருண்டைகளை எடுத்து திரட்ட ஆரம்பிங்கள்.

இந்த சமயத்தில் நீங்கள் சப்பாத்திக்கு பயன்படுத்துவது போல மாவை தொட்டு திரட்ட கூடாது. எண்ணெயை தொட்டு தான் திரட்ட வேண்டும். ஏனெனில் மாவை தொட்டு திரட்டிய பிறகு எண்ணெயில் போடும் பொழுது மாவு எண்ணெயில் கருகி விடும். இதனால் பூரியின் மேலே கருப்பாக படிந்து எண்ணெய்யும் வீணாகி விடும். இந்த குறிப்பையும் பூரி சுடும் போது தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த பூரி சுடும் போது எண்ணையின் சூடு பதம் மிகவும் அவசியம். எண்ணெய் நன்றாக சூடான பிறகு மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயின் மேல் லேசாக புகை வர வேண்டும். இந்த பதத்தில் இருக்கும் பொழுது நீங்கள் பூரியை போட்டால் தான் போட்டவுடன் பூரி நன்றாக உப்பி வரும். அப்படி வந்த உடனே மறுபடியும் திருப்பி போட்டு அதுவும் நிறம் மாறிய உடனே எடுத்து விட வேண்டும். அதிகபட்சம் ஒரு புரி இரண்டு மூன்று நிமிடத்திற்குள்ளாகவே எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஃப்ரிட்ஜில் எப்போதுமே வதங்கி கொண்டிருக்கும் இந்த காயில், காரசாரமா ஆந்திரா ஸ்டைலில் ஒரு சட்னி அரைப்போமா!

இந்த பதிவில் உள்ள குறிப்புகளின்படி பூரி சுட்டுப் பாருங்கள். ஹோட்டலில் வாங்கும் பூரியை போலவே ரொம்பவே சுவையாகவும் அதே நேரத்தில் புசுபுசுவென்று இருக்கும். அத்தோடு எண்ணெயும் அதிகம் குடிக்காது. இந்த முறையில் நீங்கள் பூரி சுட்டுப் பாருங்கள். இது வரைக்கும் இது தெரியாமல் போச்சுன்னு நிச்சயமா நினைப்பீங்க அந்த அளவிற்கு டேஸ்ட் சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -