ஹோட்டலில் செய்யும் அதே பக்குவத்தில் பூரி, சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான உருளைக்கிழங்கு மசாலாவை இப்படி செய்தால், எத்தனை பூரி கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்

poori
- Advertisement -

தினமும் செய்யும் இட்லி தோசையை தவிர்த்து, என்றாவது ஒருநாள் சப்பாத்தி, பூரி செய்துவிட்டால் போதும். அன்றைய தினம் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதிலும் பூரியுடன் தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு மசாலா செய்துவிட்டால் போதும். சாப்பிட, சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு இந்த உருளைக்கிழங்கு மசாலாவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஓட்டலில் செய்யும் உருளைக்கிழங்கு மசாலா மட்டும் தனி வித சுவை இருக்கிறது. அதே பக்குவத்தில் வீட்டிலேயேயும் செய்தால் இன்னும் இரண்டு பூரி அதிகமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரைக்கிலோ, வெங்காயம் – 3, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 7, சோம்பு – ஒரு ஸ்பூன், பிரியாணி இலை – 2, எண்ணெய் – 4 ஸ்பூன், கடலை மாவு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவிக் கொண்டு, அதனைப் ஒரு குக்கரில் சேர்க்க வேண்டும். பின்னர் அதனுடன் 4 அல்லது 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, விசில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் இருந்து உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, தோல் உரித்து, கைகளை பயன்படுத்தி ஒன்றும் பாதியுமாக மசித்து வைக்க வேண்டும்.

பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இவற்றுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக கொதித்த பிறகு ஒரு ஸ்பூன் கடலை மாவை அரை டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கரைத்து இவற்றுடன் சேர்த்து கலந்து விடவேண்டும். கடலை மாவு சேர்த்து 5 நிமிடம் உருளைக்கிழங்கு மசாலா நன்றாக கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி கலந்து விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -