ஓட்டலில் சாப்பிடக் கூடிய அதே சுவையில் மொறு மொறு ரவா தோசையை வீட்டிலேயே செய்து அசத்திட முடியும்

rava-dosai0
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் இது போன்ற உணவு வகைகளில் பலரும் விருப்பமாக சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது தோசை தான். ஹோட்டலுக்கு சென்றால் கூட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் ஆர்டர் செய்வது தோசையாக தான் இருக்கும். ஏனென்றால் ஹோட்டலில் கொடுக்ககூடிய தோசை மிகவும் மொறுமொறுவென்று சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். எனவே தான் ஹோட்டலில் சாப்பிடும் தோசை போன்றே வீட்டில் செய்யும் தோசையும் இருக்க வேண்டும் என குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் செய்யக்கூடிய தோசையும் மொறு மொறுவென்று சுவையாக வருவதற்கு இங்கு கூறப்பட்டுள்ள உணவு பொருட்களின் அளவுகளை சரியாக எடுத்துக் கொண்டால் போதும். அப்படி சுவையான ரவா தோசையை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

idli-sambar

தேவையான பொருட்கள்:
ரவை – 250 கிராம், அரிசி மாவு – 100 கிராம், மைதா மாவு – 50 கிராம், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், வெள்ளை எள் – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, நெய் – 2 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை:
இங்கு கூறப்பட்டுள்ள சரியான அளவுகளில் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் ஹோட்டலில் இருக்கும் அதே சுவையில் மறு மறு ரவா தோசையை செய்ய முடியும். இந்த அளவுகளின் படி வீட்டிலிருக்கும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் சாப்பிடும் அளவிற்கு தோசைகள் செய்ய முடியும்.

rava-dosai

முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் 250 கிராம் ரவை, 100 கிராம் அரிசி மாவு, 50 கிராம் மைதா மாவு மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகை சிறிய உரலில் வைத்து லேசாக தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வெள்ளை எள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இவற்றுடன் லேசாக தண்ணீர் சேர்த்து கைகளை வைத்து நன்றாக கலந்துவிட வேண்டும். இதில் மைதா மாவு சேர்த்திருப்பதால் மாவு கட்டிகள் இல்லாமல் இருக்க தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

rava-dhosai4

பின்னர் இந்த தோசை மாவு எப்போதும் தோசை சுட பயன்படுத்தும் அரிசி மாவை விட சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது தோசைக்கல்லை வைத்து,அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக தேய்த்துவிட வேண்டும். பிறகு ஒரு கரண்டி மாவையெடுத்து தோசை ஊற்ற வேண்டும். தோசை ஆங்காங்கே ஓட்டை ஓட்டையாக வரும். தோசையின் மீது அரை ஸ்பூன் நெய் சேர்த்து, தோசை கரண்டியை வைத்து நன்றாகத் தடவி விட வேண்டும். பின்னர் தோசை சிவந்ததும் திசையை மடித்தெடுத்து தட்டில் வைத்து பரிமாறி கொடுக்க வேண்டும்.

- Advertisement -