எந்த ராசிக்காரர் எதை செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் தெரியுமா ?

rasi-palan
- Advertisement -

மேஷம்
meshamமேஷ ராசிகாரர்களுக்கு பொதுவாக கண் மற்றும் இதயம் சபந்தமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இவர்கள் கண்களுக்கு தேவையான பயிற்சியும், சைக்ளிங், ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

ரிஷபம்
rishabamஉணவை விரும்பி சாப்பிடும் பழக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு. பெரும்பாலான நேரங்களில் தன் தேவைக்கு அதிகமான உணவையும் இவர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆகையால் உடல் பருமனை குறைக்க ஏதாவது உடற்பயிற்சியை இவர்கள் செய்தால் ஆரோக்கியமாக வாழலாம். தினசரி செய்யும் பயிற்சியோடு இவர்கள் நடம் ஆடுவது, கழுத்துக்கு தேவையான பயிற்சி போன்றவற்றையும் செய்வது சிறந்தது.

மிதுனம்
midhunamமிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலான நேரங்களில் தாங்கள் மனம் போன போக்கில் இருப்பார்கள். இவர்களுக்கு நரம்பு மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகையால் அதற்கு ஏற்றால் போல் உணவு உண்ணுவது சிறந்தது. அதோடு இவர்கள் ஒரு குழுவாக இணைந்தால் எதையும் எளிதாக செய்வார்கள் ஆகையால் குழுவாக செய்யும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து இவர்கள் செய்யலாம்.

கடகம்
kadagamகடக ராசிக்காரர்களுக்கு நுரையீரல் நரம்பு மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகையால் அதற்கேற்ப உணவு வகைகளை இவர்கள் சாப்பிடுவது அவசியம். இவர்களுக்கு தண்ணீரில் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும் ஆகையால், நீச்சல் மற்றும் நீர் சம்மந்தமான உடற்பயிற்சிகளை இவர்கள் மேற்கொள்ளலாம்.

சிம்மம்
simmamசிம்ம ராசிகாரர்களுக்கு முதுகு, முதுகெலும்பு மற்றும் இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தங்கள் கோவத்தை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. இவர்கள் ருசியான உணவை விரும்பி உண்ணுவர். அதில் தவறில்லை ஆனால் அதற்கு ஏற்றார் போல தினசரி இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழமுடியும். மூச்சி பயிற்சி மற்றும் முதுகு பகுதிக்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்வது சிறந்தது.

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்களுக்கு செரிமான பிரச்சனை மற்றும் மண்ணீரல் சம்மந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. இவர்கள் எப்போதும் தங்களது உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்றாலும், உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றால் சற்று சோம்பேறித்தனம் படுவார்கள். உடலில் உள்ள அனைத்து பாகங்களும் இயங்கும்படியாக விளையாடுவது, நடனம் ஆடுவது போன்றவற்றை இவர்கள் செய்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

துலாம்
thulamதுலாம் ராசிக்காரர்களுக்கு இடுப்பு, முதுகு பகுதி மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். இவர்கள் அதிகம் சோர்வடைய செய்யும் எந்த உடற்பயிற்சியையும் செய்யாமல் இருப்பதே நல்லது. தினந்தோறும் நடைப்பயிற்சி, உங்களக்கு பிடித்த ஓடி ஆடும் விளையாட்டு ஆகியவற்றில் எதையாவது செய்யலாம்.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இனப்பெருக்க அமைப்பில் சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்னும் சிலர்க்கு கழிவுறுப்புப் பகுதியிலும் சில பிரசைகள் வரலாம். ஆகையால் அதை போகும் விதமான உணவை உண்பது நல்லது. கராத்தே, கும்பு போன்ற ஏதாவது தற்காப்பு கலைகளையே நீங்கள் தினமும் பயிற்சியாக செய்யலாம். இதை செய்தாலே உங்கள் ஆரோக்கியமும் மன வலிமையும் மேம்படும்.

தனுசு
dhanusuதனுசு ராசிக்காரர்களுக்கு தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மற்ற ராசிக்காரர்களோடு ஒப்பிடுகளை இவர்கள் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். இருந்தாலும் மலை ஏறுவது, ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வது போன்றவை உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்
magaramமகர ராசிகாரர்களுக்கு பல் மற்றும் முழங்காலில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகையால் நீங்கள் அதற்கு ஏற்ப உணவையும் உடற்பயிற்சியையும் செய்வது அவசியம். தினமும் ஜாகிங் செல்லலாம், வெளியில் ஜாகிங் செல்ல முடியாதவர்கள் நின்ற இடத்தில் இருந்துகொண்டே கூட ஓடலாம். இதன் மூலம் உங்களது ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்
kumbamகும்ப ராசிகாரர்களுக்கு கால் சம்மந்தமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவர்கள் நடனம் ஆடுவது, நீண்ட தூரம் நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.

மீனம்
meenamமீன ராசிக்காரர்களுக்கு பாதம் சம்மந்தமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதோடு சில நேரங்களில் நோய் எதிர்ப்பு சக்தியும் உங்களுக்கு குறைவாக காணப்படலாம். நீங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் யோகாசனம் செய்வது அவசியம். அதோடு நீச்சல் போன்ற தண்ணீர் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வைகைகளை அதிகம் உண்பது சிறந்தது.

இவை அனைத்தும் பொதுவான ராசி பலன் தான். அவரவர் ஜாதகத்தை பொறுத்து இதில் சில மாறுதல்கள் இருக்கும்.

- Advertisement -