எந்த ராசிக்கார்கள் சிவனை எப்படி வழிபாட்டால் பூரண அருள் கிடைக்கும் தெரியுமா ?

Astrology

உலக மக்கள் அனைவரையும் காத்து ரட்சிக்கும் சிவபெருமானின் அருளை பூரணமாக பெறுவதற்கு நியதிகள் சில இருக்கின்றன. அதன் படி எந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை எப்படி வணங்கினால் அவரது அருள் மொழியில் நனையலாம் என்ற பொதுவான ராசி பலன் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

lingam

மேஷம்

எதையும் வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் மலைமேல் அமர்ந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சிவனை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம். அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் வீற்று அருள்பாலிக்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வெல்லம் கலந்த நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

ரிஷபம்

பொருள் ஈட்டுவதில் வல்லவர்களான ரிஷப ராசி நண்பர்கள், சிதம்பரம், திருவானைக்காவல், திருக்கடையூர் ஆகிய ஊர்களில் வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். ஒருசிலரால் வயது முதிர்வு காரணமாகவும் பணிச்சுமை காரணமாகவும் அவ்வளவு தூரம் செல்லமுடியாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள், உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, தயிரை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து சிவாயநம என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

- Advertisement -

இதையும் படியுங்கள்:
குரு பகவானின் அருள் பெற சொல்லவேண்டிய மந்திரம்

மிதுனம்

தங்கள் பேச்சுதிறமையால் உறவுகளை மேம்படுத்தும் திறன் கொண்ட மிதுன ராசிக்காரர்கள், திருவாரூர், திருச்செங்கோடு, காளஹஸ்தி ஆகிய ஊர்களில் வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, கரும்புச்சார் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம்

எல்லோரிடமும் பேரன்பாய் இருக்கும் கடக ராசிக்காரர்கள், கங்கைகொண்ட சோழபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். ஒருசிலரால் வயது முதிர்வு காரணமாகவும் பணிச்சுமை காரணமாகவும் அவ்வளவு தூரம் செல்லமுடியாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள், உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து சிவாயநம என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

triyambakeswarar lingam

சிம்மம்

எங்கு சென்றாலும் தன் பின் ஒரு கூட்டம் இருக்கும்படி பிறரை எளிதில் வசீகரிக்கும் தன்மை கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், சிதம்பரம், திருவானைக்காவல் சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, சிவப்புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கன்னி

தன்னிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்துண்ணும் தன்மை கொண்ட கன்னி ராசிக்காரர்கள், திருப்பரங்குன்றம், வேதாரண்யம் சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, பால் மற்றும் நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து சிவாயநம என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

துலாம்

ஆணித்தரமான பேச்சை கொண்ட துலாம் ராசிக்காரர்கள் காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

lingam

விருச்சகம்

எப்போதும் எதையும் மனதிலேயே வைத்துக்கொள்ளும் விருச்சிக ராசிக்காரர்கள் திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வெல்லம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து சிவாயநம என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

தனுசு

தங்களின் கல்வி அறிவை கொண்டு அரசாங்கத்தில் உயர் பதவி வரை செல்லும் ஆற்றல் கொண்ட தனுசு ராசிக்காரர்கள், திருவானைக்காவல், திருவண்ணாமலை சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மகரம்

கடினமாக உழைக்கும் தன்மை கொண்ட மகர ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, நல்லெண்ணெய் அபிஷேகம் சிவாயநம என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

lingam

கும்பம்

பிறர் செய்யும் கெடுதல்களை கூட உடனே மறக்கும் தன்மை கொண்ட கும்ப ராசிக்காரர்கள் திருப்பரங்குன்றம், காளஹஸ்தி சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, இளநீர் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மீனம்

பிறரிடம் எப்போதும் அன்பு செலுத்தும் தன்மை கொண்ட மீன ராசிக்காரர்கள், காளஹஸ்தி, ஜலகண்டேஸ்வரர் கோயில், சிதம்பரம் சென்று அங்கு வீற்று அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, சிவப்புச் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்து நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.