முட்டை வேக வைக்கும் பொழுது உடைந்து வீணாய்ப் போகிறதா? மீந்து போன சப்பாத்தியை இப்படிக்கூட செய்யலாமா? இத தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு ஃபீல் பண்ணாதீங்க!

egg-chappathi
- Advertisement -

சிறுசிறு சமையல் மற்றும் வீட்டு குறிப்புகளை நாம் தெரிந்து வைத்திருந்தால் நமக்கு சரியான சமயத்தில் அது நிச்சயம் உதவி செய்யும். அந்த வகையில் இதுவரை நீங்கள் பார்க்காத சில சமையல் மற்றும் வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள். உங்களில் சாதாரண முட்டையை கூட ஒழுங்காக வேக வைக்க தெரியாமல் எவ்வளவோ பேர் இருக்கலாம். மீந்து போன சப்பாத்தியை குப்பையில் எறியாமல் அப்போது புதிதாக சமைத்தது போல் நொடியில் மாற்றி விட முடியும் தெரியுமா? இது போல சில ரகசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

egg

முட்டையை வேக வைப்பது பெரிய கம்பு சுத்துற வேலை இல்லைங்க. சரியாக பத்து நிமிடத்தில் சரியான பதத்திற்கு முட்டையை வேக வைக்க அடுப்பை முதலில் நீங்கள் மீடியம் ஃபிளேமில் வைக்க வேண்டும். அடுப்பை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைக்கக் கூடாது. மீடியமான நெருப்பில் 10 நிமிடம் முட்டையை அவித்து எடுத்தால் ரொம்ப ரொம்ப மென்மையான முட்டையாக வெந்து வரும்.

- Advertisement -

முட்டை வேக வைக்கும் பொழுது அதனுடைய ஓடு உடையாமல் இருக்க பொதுவாக உப்பை தூவுவது வழக்கம். ஆனால் அதற்கு பதிலாக சோடா உப்பை அதாவது சமையல் சோடா எனப்படும் பேக்கிங் சோடாவை கொஞ்சமாக தூவினால் போதும், கொஞ்சம் கூட முட்டை ஓடு உடையாமல் அழகாக வந்து வரும். இந்த முறையில் எத்தனை முட்டைகளை வேணுமானாலும் உடையாமல் வேக வைத்துக் கொள்ளலாம்.

boiled-egg-fry

வேக வைத்த இந்த முட்டையை வெறுமனே சாப்பிட்டால் அனைவருக்கும் எல்லா நேரமும் பிடிப்பது இல்லை. இதற்கு அவித்த முட்டைகளை கத்தி அல்லது பிளேடு போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி ஆங்காங்கே கீறல்களை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சாதாரண வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சிட்டிகை அளவு மஞ்சள் தூள், கொஞ்சமாக மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை தூவி முட்டைகளைப் போட்டு 2 நிமிடம் பிரட்டி எடுத்தால் மசாலாக்கள் முட்டையின் உள்ளே சென்று சாதாரண முட்டையைக் கூட சூப்பரான முட்டையாக மாற்றி விடும். அப்புறம் யார் தான் முட்டையை வேண்டாம் என்று கூறுவார்கள்?

- Advertisement -

மீந்து போன சப்பாத்தியை பொதுவாக குப்பையில் தூக்கி எறிவது தான் வழக்கம். காய்ந்து போன சப்பாத்தியை யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனால் அதே காய்ந்து போன சப்பாத்தியை மீண்டும் புதிதாக சுட்டது போல் செய்ய அற்புதமான டிப்ஸ் உள்ளது. முன்னிரவு சுட்ட சப்பாத்தியை கூட மறுநாள் காலையில் நீங்கள் இட்லி அவிக்கும் பொழுது ஒரு தட்டில் துணியை விரித்து அதன் மீது சப்பாத்திகளை வைத்து வேக வைத்து எடுக்கலாம். காய்ந்து போன சப்பாத்தி கூட புதிதாக சுட்டது போல் ரொம்ப ரொம்ப மிருதுவாக சூடாக வெந்து இருக்கும். அப்புறம் என்னங்க இட்லியுடன், சப்பாத்தியையும் சேர்த்து சாப்பிட வேண்டியது தான்.

elumichai lemon

எலுமிச்சை பழத்தை நீண்ட நாட்களுக்கு எப்போதும் பாதுகாப்பது கடினம் தான். இதற்கு சுலபமாக ஒரு டிப்ஸ் உள்ளது. கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை நிரப்பி அந்த தண்ணீருக்குள் எலுமிச்சை பழங்களை போட்டு இறுக்கமாக மூடி ஃபிரிட்ஜில் வைத்தால் போதும் 15 நாட்கள் ஆனாலும் எழுமிச்சை பழம் அப்படியே ப்ரஷ்ஷாக இருக்கும். நமக்கு தேவையான பொழுது எடுத்து பயன்படுத்த வேண்டியது தான்.

- Advertisement -