பல வருடங்களாக காலில் போட்டு கருத்து போன கொலுசை, 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற இந்த 1 பொருள் போதும்.

kolusu
- Advertisement -

டீ போடும் சமயத்தில், டீத்தூளை வைத்து தான் பழைய கொலுசை புத்தம் புது கொலுசாக மாற்றப் போகின்றோம். வீட்டில் இருக்கும் பெண்கள் கால்களில் போட்டிருக்கும் கொலுசு ஒரு சில நாட்களில் அழுக்கு படிந்து ரொம்பவும் கருப்பாக மாறி இருக்கும். இதை கடையில் கொடுத்து பாலிஷ் போட்டால் நூறு ரூபாய்க்கு மேல் நிச்சயம் செலவாகும்.

அடிக்கடி வெள்ளி கொலுசை இப்படி பாலிஷ் போடுவது நல்லது அல்ல. வெள்ளியின் எடை குறைந்து போகவும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்தபடி வெள்ளி பொருட்களை சுத்தம் செய்ய ஏராளமான குறிப்புகள் உள்ளது. இன்று நாம் பார்க்கப் போவதும் ஒரு சுலபமான வீட்டு குறிப்பு தான்.

- Advertisement -

வெள்ளி கொலுசை சுலபமாக சுத்தம் செய்ய குறிப்பு

கருத்து போன ஒரு செட் வெள்ளி கொலுசு எடுத்துக்கோங்க. ஒரு பாத்திரத்தில் இந்த கொலுசு முழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். தண்ணீர் சூடாகி வந்ததும் 1 ஸ்பூன் டீத்தூளை போட்டு, 1/2 ஸ்பூன் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு, ஊற்றி கொதிக்க வையுங்கள்.

தண்ணீர் நிறம் மாறி வந்ததும் எடுத்து வைத்திருக்கும் அந்த கருத்து போல கொலுசை அந்த தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கொலுசு சுடு தண்ணீரில் கொதித்தால் போதும். உடனே அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

பாத்திரத்தை அடுப்பில் இருந்து அப்படியே கீழே எடுத்து வைத்துவிட்டு, அடுத்ததாக 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை இதில் போடுங்கள். அப்படியே தண்ணீர் பொங்கி வரும். மூன்று நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கொலுசை அந்த தண்ணீரில் இருந்து எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி அலசி கழுவி விடுங்கள்.

இப்போது இந்த கொலுசின் மேலே கொஞ்சமாக ஷாம்புவை விட்டு ஒரு பல் தேய்க்கும் பிரஷ் போட்டு லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும். உங்களுடைய கொலுசு நிமிடத்தில் பளிச் பளிச்சென மாறிவிடும். பிறகு இந்த கொலுசை சுத்தமான நல்ல தண்ணீரில் கழுவி வெள்ளை துணியில் நன்றாக துடைத்து எடுத்தால் கருத்து போன கொலுசு பாலிஷ் போட்ட கொலுசு போல புதுசு போல மாறி இருக்கும்.

- Advertisement -

இது ரொம்ப ரொம்ப சிம்பிள் மெத்தட் தான். வெறும் 6 நிமிடம் மட்டும்தான் உங்கள் கொலுசு சுடுகின்ற அந்த தண்ணீரில் ஊற வேண்டும். அதற்கே அந்த கொலுசில் ஒட்டி இருக்கும் அழுக்கு எல்லாம் நன்றாக ஊறிவிடும். நாம் சேர்த்திருக்கும் டீ தூள், பேக்கிங் சோடா, ஷாம்பு இந்த மூன்று பொருட்களும் சேர்ந்து உங்கள் கொலுசை பளிச்சிட செய்யும்.

இதையும் படிக்கலாமே: தரையை துடைக்க மட்டும் பயன்படுத்தும் லைசாலுக்கு பின்னால் இத்தனை விஷயம் அடங்கி இருக்குதா?

ஆறு மாதத்திற்கு ஒரு முறை கொலுசை இப்படி சுத்தம் செய்து போட்டுக் கொண்டால் காலில் இருக்கும் கொலுசு எப்போதும் புத்தம் புது பொலிவுடன் இருக்கும். வீட்டு குறிப்பு தேவை என்பவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -