பட்டுப் போன்ற மென்மையான கூந்தலை பெற

hair tips
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவருக்கு முடி வறண்டு போய் பொலிவிழந்து தான் இருக்கிறது. இதனாலேயே எப்பொழுதும் பார்க்க பரட்டை தலை போல தான் இருக்கும் இப்படியான கூந்தலை யாருக்குத் தான் பிடிக்கும். ஒவ்வொருவரும் தங்கள் முடி மென்மையாக பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

பெரும்பாலும் இயற்கையாக இப்படி முடி அமைவது சிரமம் தான். யாரோ ஒருவருக்கு தான் இது போன்ற முடி அமைப்பு இருக்கும். அப்படியானால் நமக்கு அந்த மாதிரியான முடியை பெற முடியாதா? என்றால் நிச்சயமாக முடியும். அதற்கு சமையலறையில் இருக்கும் முட்டையை முறையாக பயன்படுத்தினாலே போதும் வாங்க அது எப்படி என்று அழகு குறிப்பு குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பட்டுப் போன்ற பளபளப்பான கூந்தலை பெற

முட்டையில் புரதம், பயோடின் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இது முடிக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தை கொடுக்கும். இதனால் முடி வலுவாகவும் பளபளப்பாகவும் பார்க்க அழகாகவும் காட்சியளிக்கும். வாங்க இந்த முட்டையை பயன்படுத்தி முடியை எப்படி மென்மையாகவும், அழகாகவும் மாற்றுவது என்று தெரிந்து கொள்ளலாம்.

முட்டை ஹேர் மாஸ்க்

ஒரு பவுலில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதை அப்படியே அடித்து உங்கள் முடியின் நுனி வரை தடவி விடுங்கள். அதன் பிறகு 20 நிமிடம் கழித்து மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு முடியை அலசி விடுங்கள். இந்த முட்டைகளை உங்கள் முடியும் அளவிற்கு ஏற்றார் போல் பயன்படுத்துங்கள்.

- Advertisement -

முட்டை ஹேர் கண்டிஷனர்

இதற்கு ஒரு பவுலில் ஒரு முட்டையை உடைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு அதை உங்கள் தலைமுடியின் வேர் முதல் நுனி வரை தடவி விடுங்கள். இந்த பேக் 20 நிமிடம் வரை உங்கள் தலையில் அப்படியே ஊறட்டும். அதன் பிறகு ஷாம்பு போட்டு தலை முடியை அலசி விடுங்கள். கூந்தல் அத்தனை பளபளப்பாக இருக்கும்.

முட்டை ஆலிவ் எண்ணெய் ஹேர் மாஸ்க்

பவுலில் ஒரு முட்டை, ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் இரண்டையும் கலந்து நன்றாக பேக் போல தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பேக்கை உங்கள் முடியின் வேர் முதல் நுனி வரை தடவி அப்படியே விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பு சேர்த்து முடியை அலசி விடுங்கள். இது கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன் கூந்தல் நல்ல பளபளப்புடன் இருக்கவும் உதவி செய்யும்.

- Advertisement -

முட்டை மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

இந்த முறைக்கு முட்டையுடன் தேன் கலந்து பார்க்க தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பேக்கை முடியின் வேர் முதல் முனி வரை தடவி அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு முடியை அலசி விடவும். இதுவும் முடியை நல்ல பளபளப்பு தன்மையுடன் வைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: முகப்பரு நீக்கும் முல்தானி மெட்டி

முட்டையை இப்படி பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடியின் ஈரத்தன்மை அதிகரித்து முடி பளபளப்புடன் காட்சி தருவதுடன், வறண்ட தன்மை, முடி உதிர்வு பிரச்சினைகளும் அடியோடு நீங்கி விடும். இயற்கையான முடி அழகைப் பெற முட்டையை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள் நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -