இந்த முடி கொட்டுற பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இதோ அருமையான டிப்ஸ். இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணி பாருங்க இனி ஒரு முடி கூட கொட்டவே கொட்டாது.

lady beetroot athipazham
- Advertisement -

இன்றைய இளம் தலைமுறைக்கு இருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு தான். இந்த காலத்தில் தான் இவர்களுக்கு முடி நன்றாக வளர வேண்டும் என்று ஆசை இருக்கும். அதை விதவிதமாக அலங்கரிக்க வேண்டும் என்று எண்ணமும் இருக்கும். அந்த நேரத்தில் இருக்க முடியும் உதிர்ந்து கொண்டே இருந்த அதுவே அவர்களுக்கு பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். முடி உதிர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனில் முதலில் நாம் கட்டுப்படுத்த வேண்டியது மன அழுத்தத்தை தான். பெரும்பாலான முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அழகு குறிப்பு பதிவில் முடி உதிர்வை தடுப்பதற்கான எளிய வழிமுறைகளை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வை தடுக்க டிப்ஸ்
முடி உதிர்வை தடுக்க முதலில் நாம் உடலுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டும். ஏனெனில் முடி உதிர்வுக்கு நாம் மேல் பூச்சாக பலவற்றை பயன்படுத்தினாலும் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும் உணவு தான் முடி உதிர்வை தடுக்க பெரும் பங்கு வகிக்கிறது. ஆகையால் முடி உதிர்வை தடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் நெல்லிக்காய் கறிவேப்பிலை, பேரீச்சம் பழம் அத்திப்பழம், பப்பாளி பழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை பறித்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து ஒரு முறை கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி இந்த தண்ணீரை ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்பொழுதும் குளிப்பது போல் தலைக்கு குளித்த பிறகு கடைசியாக இந்த தண்ணீரால் தலைமுடியை அலசினால் போது ஒரு முடி கூட கொட்டவே கொட்டாது.

அடுத்து இன்னொரு சிம்பிள் ரெமிடி ஆனால் இதையெல்லாம் கூட தலைக்கு போடுவார்களா என்று நீங்கள் யோசிக்கும்படியான ஒரு பொருள். அது வேறு எதுவும் இல்லை பீட்ரூட் நன்றாக துருவி பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். அதையும் நீங்க தலைக்கு குளித்த பிறகு உங்கள் தலையில் பேஸ்ட் போல அப்ளை செய்து சிறிது நேரத்துக்கு கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு அலசி விடுங்கள். இந்த பீட்ரூட் பயன்படுத்தும் போது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன் முடி பட்டு போல ஷைனிங் ஆக மாறும். இதனால் முடியின் நிறம் மாறும் என்ற பயம் வேண்டாம்.

- Advertisement -

அடுத்து பச்சை பயிர் இதையும் நன்றாக ஊற வைத்து அரைத்த பிறகு கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். இதை தலைக்கு குளித்த பிறகு தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து அலசி விடுங்கள். இந்த முறையில் நீங்கள் சரியாக முடியை அலசா விட்டால் இது தலையில் ஒட்டிக் கொள்ளும் அதன் பிறகு துவட்டி எடுப்பது கொஞ்சம் சிரமம் இருக்கும். பச்சைப் பயிரை அப்படியே தேய்க்காமல் சுடு தண்ணீர் போட்டு கொதித்த பிறகு தேய்த்து கொள்ளுங்கள். ஏனெனில் இது உடலைக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடி உதிராமல் ஸ்ட்ராங்காக இருக்க முட்டைக்கு பதிலா இந்த பேக்கை பயன்படுத்தி பாருங்க.

மேற்கூறிய அனைத்து முறைகளையும் நீங்கள் செய்யும் முன் தலைக்கு நன்றாக குளித்து முடித்த பிறகு எண்ணெய் பிசுக்கு இல்லாத நிலையில் இதையெல்லாம் தேய்த்து பத்து நிமிடம் வரை வைத்திருந்து பிறகு அலச வேண்டும். இதை மட்டும் சரியாக பின்பற்றி நல்ல ஆரோக்கியமான உணவையும் உட்கொண்டு மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே போதும். உங்கள் முடி உதிர்வு கட்டுப்படுவதோடு முடி நல்ல முறையில் வளவும் செய்யும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -