வெயில் காலத்தில் வரக் கூடிய அழகு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க கற்றாழையை இப்படி தான் பயன்படுத்த வேண்டும். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தால் கற்றாழையை இனி எங்கு பார்த்தாலும் விட மாட்டீங்க.

aloe vera
- Advertisement -

இப்போது வெயிலின் கொடுமை அதிகமாகவே இருக்கிறது. வெயிலின் தாக்கத்தினால் உடலுக்கு உள்ளேயும் வெளியும் எண்ணற்ற பிரச்சனைகள் தோன்றும். இவை அனைத்தையும் சரி செய்ய சுலபமான ஒரே வழி கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவது தான். எந்தெந்த பிரச்சனைக்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் இந்த பயனுள்ள தகவல்கள் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் இந்த கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். கற்றாழையை பொறுத்த வரையில் நல்ல முற்றியதாக இருக்க வேண்டும். அதிலும் கற்றாழையை நறுக்கியவுடன் பயன்படுத்தக் கூடாது. அதை சிறிது நேரம் வைத்த பிறகு நாம் நறுக்கிய இடத்தில் மஞ்சள் நிற திரவம் படிந்திருக்கும் அந்த திரவம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு கற்றாழையின் தோல் நீக்கி அந்த ஜெல்லை நாம் குறைந்தது ஆறுமுறையாவது தண்ணீரில் அலசிய பிறகு தான் எதற்குமே இந்த கற்றாழையை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இப்போது வெயிலின் தாக்கத்தை குறைக்க கற்றாழையை எப்படி பருகுவது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நன்றாக சுத்தம் செய்த கற்றாழை ஜெல்லை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் 1 சிறிய துண்டு இஞ்சி, 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1/2 எலுமிச்சை பழத்தின் சாறு, 1/2 ஸ்பூன் உப்பு இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை சாப்பிட்டு ஒரு மணி நேரம் வரையில் வேறு எதையும் சாப்பிடக் கூடாது.

இதை குடிப்பதன் மூலம் நம் உடல் உஷ்ணம் முழுவதுமாக குறைய தொடங்கி விடும். அதே போல் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் புண் போன்றவை எல்லாம் ஆறும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்கள் தாரளமாக இந்த கற்றாழை சாறை குடிக்கலாம். ஆனால் ஏற்கனவே குடல் வயிறு வாய் புண் உள்ளவர்கள் இந்த சாறுடன் இஞ்சியும் எலுமிச்சை சாறையும் சேர்ப்பதை தவிர்த்து விட்டு பருக வேண்டும். அது மட்டுமின்றி நாட்பட்ட வியாதிகளுக்கு மருந்து எடுப்பவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், போன்றவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த கற்றாழை சாறை அருந்தலாம். இதை இரண்டு மாதம் வரை எடுக்கலாம் அதன் பிறகு தொடர்ந்து சாப்பிடக் கூடாது.

- Advertisement -

இப்போது வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை எப்படி காப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் வெளியில் எப்போது சென்று வந்தாலும் இந்த கற்றாழை மடலை இதே போல் சுத்தம் செய்து அதை மிக்ஸியில் அரைத்து சிறிது நேரம் உங்கள் முகத்தில் ஃபேஸ் பேக் போல போட்டு சிறிது நேரம் கழித்து முகத்தை அலம்பி விடுங்கள். இதை தொடர்ந்து செய்யும் போது உங்கள் முகத்தில் வெயிலினால் ஏற்படும் கருந்திட்டுகள் எதுவும் தோன்றாது.

அதே போல் இந்த வெயில் காலத்தில் தலை முடி வறட்சியின் காரணமாக முடி உதிர்வு, முடி பிளவு பட்டு காணப்படும் இந்த பிரச்சனைக்கும் கற்றாழை ஒரு சிறந்த தீர்வு. இதே போல் கற்றாழை ஜெல்லை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து அரைமணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சீயக்காய் மைல்டான ஷாம்பு சேர்த்து குளிக்கும் போது முடி உதிர்வு, முடி பிளவு, வறட்சி போன்றவை எல்லாம் வராது.

- Advertisement -

இதே கற்றாழையை ஒரு நல்ல ஹேர் பேக் ஆகவும் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு கேரட்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். 10 சின்ன வெங்காயம் இத்துடன் ஒரு மடல் கற்றாழை சுத்தம் செய்து எடுத்து நன்றாக அரைத்து அதை தலையில் பேக் போல போட்டு அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசி விட்டால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். தலையில் இருக்கும் பேன், பொடுகு அனைத்தும் நீங்குவதுடன் இளநரை, பூச்சி வெட்டு போன்ற அனைத்து பிரச்சனைகளும் கூட சரியாகும்.

இதையும் படிக்கலாமே: ஒன்று சேர்ந்தால் விஷமாக மாறும் அபாயம்! இந்த 2 பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட ஒன்றாக சாப்பிட்டு விடக்கூடாது.

இந்த தகவல்கள் தெரிந்து கொண்ட பின் நீங்கள் இந்த கற்றாழையை இது போன்ற ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதை கற்றாழை சாறாக பருகும் போது மட்டும் மேல் சொன்ன பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

- Advertisement -