கோயிலிற்கு செல்ல நேரம் இல்லாதவர்கள் இறையருளை எப்படி பெறுவது

gopuram

இன்றைய தலைமுறையினர் பலர் நிற்க கூட நேரம் இன்றி வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் அவர்களை கோயிலிற்கு போகச்சொன்னால் சிலர் சலித்துக்கொள்ளவும் செய்கிறார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் இறையருளை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாக கோயிலிற்கு செல்லமுடியாதவர்கள் வேலைக்கு செல்லும் வழியில் இருக்கும் கோவில்களின் கோபுரத்தை பார்த்து மனதார வேண்டிக்கொள்ளலாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது நம் முன்னோரிகளின் வாக்கு.

கோவில் கோபுரத்தில் இறைவன் வெளிப்படையாகவும், கர்ப்ப கிரகத்தில் சூட்சுமமாகவும் வீற்றிருக்கிறார் என்பது நம்பிக்கை. ஆகையால் கோபுரத்தை பார்த்து மனமுருகி வேண்டினாலேயே இறைவன் நமது பிரச்சனைகளை போக்குவார். அதற்காக கோபுரத்தை மட்டுமே தரிசித்துவிட்டு கோயிலிற்கு செல்லாமல் இருந்துவிடாதீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோயிலிற்கு சென்று இறைவனை தரிசிப்பதே சாலச்சிறந்தது.