சில பேருக்கு 30 வயது தொடும்போதே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டுவிடும். வயதான தோற்றம் வந்துவிடும். உதாரணத்திற்கு வாயை சுற்றி சிரிக்கும் போது ஒரு கோடு வரும் இல்லையா, அந்த லைன் அப்படியே தெரியும். சிரிக்கும் போது கண்களின் ஓரங்களில் சுருக்கம் தெரியும். இதெல்லாம் வயதான தோற்றத்தை வெளிப்படையாக காட்டக் கூடியது. நம்முடைய அழகை குறைக்க கூடியது. இந்த சுருக்கப் பிரச்சனைகள் வராமல் இருக்கவும், வந்த சுருக்கங்களை படிப்படியாக குறைக்கவும், முகம் உடனடியாக பொலிவு பெறவும், தக்காளியை வைத்து ஒரு சில அழகு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த அழகு குறிப்புக்கு ஹீரோ தக்காளி. தக்காளியோடு என்னென்ன பொருட்களை எல்லாம் சேர்க்கலாம் என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஒரு சில காம்பினேஷனில் அழகு குறிப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எது செட் ஆகுமோ அதை நீங்க செலக்ட் பண்ணி ட்ரை பண்ணி பார்க்கலாம்.
குறிப்பு 1:
ஒரு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பவுடர் சர்க்கரை 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், தக்காளி பழச்சாறு ஊற்றி, நன்றாக கலந்தால் சூப்பரான ஒரு பேக் கிடைக்கும். இதை உங்களுடைய முகத்தில் போட்டு நன்றாக ஸ்கிரப் செய்து 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி பாருங்கள். முகம் உடனடியாக பொலிவு பெறும். முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் நீங்கும்.
குறிப்பு 2:
அடுத்து இன்னொரு குறிப்பு ஒரு சிறிய கிண்ணத்தில் பால் பவுடர் 1 டேபிள் ஸ்பூன், தக்காளி பழச்சாறு தேவையான அளவு ஊற்றி, இதை நன்றாக கலந்து உங்களுடைய முகத்தில் பேஸ் பேக் போடலாம். இந்த பேக்கை மசாஜ் செய்தபடி முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து விட்டு, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி பாருங்கள். முகம் அவ்வளவு அழகாக மாறிவிடும்.
குறிப்பு 3:
ஒரு சிறிய கிண்ணத்தில் பால் பவுடர் 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் தேவையான அளவு, தக்காளி பழச்சாறு தேவையான அளவு, ஊற்றி இதையும் நன்றாக கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போட்டால் முகம் அப்படியே இறுக்கிப்பிடிக்கும். இறுக்கி பிடிக்கும்போது முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 20 நிமிடம் கழித்து பேக்கை கழுவி கொள்ளலாம்.
குறிப்பு 4:
தக்காளி பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அந்த தக்காளி பழத்துக்கு நடுவே கொஞ்சமாக மஞ்சள் தூள், போட்டு தக்காளி பழத்தை உங்கள் முகத்தில் வைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுத்தால் முகம் 10 நிமிடத்தில் பளபளப்பாக மாறும். மஞ்சள் தூளுக்கு பதிலாக காபி பவுடரை கூட இதில் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: ஒரு துண்டு முலாம் பழம் இருந்தா அதை வைத்து இப்படி பேக் போட்டு பாருங்க. உங்க முகம் தங்கம் போல தகதகவென்று ஜொலித்து தேவதை போல வலம் வரலாம்.
இது எல்லாமே எங்களுக்கு கஷ்டம் என்பவர்கள் வெறும் தக்காளி பழத்தை எடுத்து இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய முகத்தில் எல்லா இடங்களிலும் படும்படி வட்ட வடிவில் அப்படியே மசாஜ் செய்யுங்கள். பத்து நிமிடங்கள் இப்படி மசாஜ் செய்தால் போதும். உங்களுடைய முகம் அப்படியே செவ செவன்னு பார்க்க தக்காளி பழம் போலவே மாறும் பாருங்களேன். மேலே சொல்லப்பட்டு இருக்கும் குறிப்புகள் எல்லாம் எளிமையானவை. ஆனால், உடனடியாக இன்ஸ்டன்ட் அழகை கொடுக்கக் கூடியவை. வாரத்தில் ஒரு நாள் இந்த குறிப்புகளை மாற்றி மாற்றி பின்பற்றி வந்தாலே முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் வராமல் பாதுகாக்கலாம்.