சப்பாத்தி மாவு என்னதான் பிசைந்தாலும் உப்பலாக வர மாட்டேன் என்கிறதா? அப்படின்னா இப்படி செஞ்சு பாருங்க சமையல் தெரியாதவங்களுக்கு கூட சப்பாத்தி புஸ்ஸென்று வரும்.

soft-chappathi
- Advertisement -

அரிசி உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் உடல் எடையை குறைப்பதிலும், ஆரோக்கியம் காப்பதிலும் கோதுமை மாவு பெரும் பங்கு வகிப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகி போய்விட்டது. சப்பாத்தி செய்யும் பொழுது மாவை பக்குவமாக நீங்கள் பிசைந்தால் தான் அது சப்பாத்தி சுடும் பொழுது நன்கு புஸ்சென்று உப்பி வரும். ஆனால் சப்பாத்தி மாவு எப்படி பிசைவது? என்பதில் தான் பலருக்கும் குழப்பம் இருக்கும். சப்பாத்தி மாவை பிசைவது முதல், சப்பாத்தி சுடுவது வரை இப்படி செஞ்சு பாருங்க சமையல் தெரியாதவர்களுக்கு கூட கண்டிப்பாக பூரி அல்லது சப்பாத்தி புஸ்ஸென்று வரும்.

சப்பாத்தி மாவு செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 300 கிராம், வறுத்த ரவை – 2 டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

சப்பாத்தி மாவு எப்படி பிசைவது?
சப்பாத்தி மாவு நன்கு பிசைய முதலில் 300 கிராம் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் அளவுக்கு வறுத்த ரவையை சேர்த்துக் கொள்வது உப்பலாக வர உதவும். தேவையான அளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் மட்டும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவு சமையல் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து பாருங்கள், மாவு நல்ல மிருதுவான தன்மையுடன் நமக்கு பிசைய வரும். பிறகு தேவையான அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது சாதாரண தண்ணீர் கூட பயன்படுத்தி மாவை ரொம்பவும் கெட்டியாக இல்லாமல், ரொம்பவும் தளர்வாக இல்லாமல் கைகளில் ஒட்டாத அளவிற்கு பிசைய வேண்டும்.

மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு கொள்வது நல்லது. இப்போது மாவு பிசைந்த உடன் நன்கு மாவை தூக்கி அடிக்க வேண்டும். பாத்திரத்திற்கு அடியில் ஏதாவது ஒரு துணியை போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் மாவை தூக்கி நன்கு அடித்து அடித்து மாவை பதப்படுத்துங்கள். அப்பொழுது தான் சாஃப்டாக மாறும். அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை நன்கு ஊற விடுங்கள். அதன் பிறகு பூரிக்கு மாவு எடுக்க வேண்டும் என்றால் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எண்ணெயைத் தொட்டு சற்று தடிமனாக சிறிய அளவில் வட்டமாக தேய்க்க வேண்டும், அதுவே நீங்கள் சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும் என்றால் கோதுமை மாவை தூவி நன்கு பெரிதாக மெல்லியதாக வட்ட வடிவில் தேயுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசைக்கல்லை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுற்றிலும் எண்ணெய் விட்டு சப்பாத்தியை போட்டு முனை பகுதிகளில் லேசாக அழுத்தம் கொடுங்கள். பின்னர் மறுபுறம் திருப்பி போட்டு இதே போல அழுத்தம் கொடுங்கள். நடுவில் நன்கு உப்பி வரும்.

அடுப்பை சப்பாத்தி சுடும் பொழுது குறைந்த தீயில் வைத்துக் கொண்டு சுட்டால் நன்கு உள்ளேயும், வெளியேயும் வெந்து உப்பலான சப்பாத்தி நமக்கு கிடைக்கும். அதுவே நீங்கள் பூரி போட வேண்டும் என்றால் எண்ணெய் நன்கு கொதித்த பிறகு அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு தேய்த்த பூரி மாவை போடுங்கள். சப்பாத்தி போட்ட பிறகு சப்பாத்தியின் மீது எண்ணெயை கரண்டியால் எடுத்து ஊற்றுங்கள். அப்போது தான் மேற்புறமும் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு விடுங்கள், நன்கு உப்பி எழுந்து வரும். அதன் பிறகு அதை சுடச்சுட நல்ல சைட் டிஷ் உடன் பரிமாறவும். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -