உங்களுடைய மணி பர்சை இப்படி மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்! பணம் தொடர்ந்து அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும்.

purse-cash

நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் சாதாரண விஷயம் அல்ல. அந்த மணிபர்சில் தான் நாம் பணத்தை வைக்கிறோம். பணம் இருக்கும் இடமெல்லாம் மகாலட்சுமியின் இடமாக பார்க்கப்பட வேண்டும். பணம் என்றாலே மகாலட்சுமியின் அம்சம் தான். அவள் எல்லோரிடத்திலும் நிலையாக இருப்பதில்லை. இன்று நம் கையில் இருப்பவள், நாளை வேறொருவர் கைகளுக்கு மாறி விடுகிறாள். இப்படி நிலையில்லாத பணத்தை வைக்கும் பர்ஸை எப்படி வைத்திருக்க வேண்டும் தெரியுமா? நீங்கள் இப்படி மட்டும் வைத்துக் கொண்டால் உங்களுக்கு தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதைப் பற்றிய ஒரு அலசல் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

purse

முதலில் பணத்தை வைக்கும் மணி பர்ஸை குப்பை போல வைத்திருக்காமல் கொஞ்சமாவது பய பக்தியுடன் சுத்தமாக வைத்திருங்கள். மணி பர்சில் எதிர்மறை விஷயங்களை எப்பொழுதும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஏதாவது பொருள் வாங்கிய பில், மருத்துவ சீட்டு தேவையில்லாத மருந்து மாத்திரைகள் போன்றவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது. சனி பகவானுக்கு உரிய இரும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் மணி பர்சில் வைத்துக் கொள்ள கூடாது. ஒரு சின்ன ஹேர்பின் கூட இரும்பால் ஆனவையாக இருந்தால் அதனை தூக்கி எறிந்து விடுங்கள்.

மணி பர்ஸில் ஏதாவது ஒரு தெய்வத்தின் படத்தை எப்போதும் வைத்திருங்கள். குறிப்பாக பணத்தை தரும் வெங்கடாஜலபதியின் புகைப்படத்தை வைத்து இருந்தால், பணம் பல மடங்கு பெருகும் என்பார்கள். அது போல் பணத்தை ஈர்க்கக்கூடிய பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பட்டை போன்ற பொருட்களை ஒவ்வொன்று சிறிய பாக்கெட்டில் வைத்து பர்சில் வைத்துக் கொள்ளலாம்.

perumal

இவை எல்லாவற்றையும் விட மேலாக ஒரு பொருள் என்றால் அது பஞ்சலோகம். பஞ்ச உலோகங்கள் சேர்ந்த பஞ்சலோகத்தை ஏதாவது ஒரு ரூபத்தில் மணி பர்சில் வைத்துக் கொண்டால், பணம் தொடர்ந்து அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும். பஞ்சலோக மோதிரம், பஞ்சலோக பிரேஸ்லெட், பஞ்சலோக காய்ன் நாணயம்) என்று உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் பணம் அதிகமாக சேரும்.

- Advertisement -

அது போல் ஒவ்வொரு முறை தினமும் உங்கள் பர்ஸை நீங்கள் எடுக்கும் பொழுது பூஜை அறையில் இருந்து சுவாமி படத்திற்கு பக்கத்தில் இருந்து எடுப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்றால் செல்லும் காரியம் வெற்றியாகும்.

purse

உங்கள் வீட்டிலேயே ராசியான நபர் என்று யாராவது இருப்பார்கள் அல்லவா? அது உங்களுடைய தாயாகவும், தந்தையாகவும், தங்கையாகவும், மனைவியாகவும் கூட இருக்கலாம். உங்களுக்கு ராசியான நபர் என்று தோன்றுபவர்கள் கையால் தினமும் ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கி பர்சில் வைத்துக் கொண்டு வெளியில் செல்லுங்கள். இவ்வாறு செல்வதால் அந்த பர்சில் மேலும் மேலும் பணம் பெருகும்.

viboothi

பர்ஸில் செயற்கை திரவியங்களை வைத்துக் கொள்வதை தவிர்க்கவும். பர்சில் செயற்கை வாசங்கள் பணவரவை தடை செய்யும். இயற்கையாக மணம் தரும் பணத்தை ஈர்க்கக் கூடிய பொருட்களை வைத்துக் கொள்வது தான் நல்லது. தெய்வீக பொருளான மஞ்சள், குங்குமம், விபூதி போன்ற பொட்டலங்களை கோவில்களில் வாங்கினால் அதை பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இவைகள் நல்ல ஆற்றல்களை வெளிவிடும் தன்மை கொண்டது. நீங்கள் பர்சை திறக்கும் பொழுது உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் வர வேண்டும். இப்படியாக மட்டும் உங்கள் பர்சை வைத்துக் கொண்டால் நிச்சயம் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிக்கலாமே
வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்திற்கு சரியான தீர்வு உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.