பலமுறை துவைத்தாலும் காட்டன் புடவை, புது பொலிவுடன், அட்டைப்போல நிற்க, அயன் பண்ணும் போது இதை பண்ணுங்க.

sarry
- Advertisement -

நிறைய பெண்களுக்கு பிடித்த புடவை காட்டன் புடவை. ஆனால் இதைத் துவைத்து கஞ்சி போட்டு மெயின்டெயின் பண்ணுவதில் சில சிரமங்கள் இருக்கிறது. காட்டன் புடவை இரண்டு அல்லது மூன்று முறை துவைத்த உடனேயே அது தன்னுடைய புது பொலிவை இழந்துவிடும். கஞ்சி நீங்கிய காட்டன் புடவையை நம்மால் கட்டவே முடியாது.

அது அழகும் தராது. எத்தனை முறை கட்டினாலும் காட்டன் புடவை அட்டை போல, மடிப்பு மாறாமல் நிற்க என்ன செய்வது. காட்டன் புடவைகளை முறையாக துவைத்து, முறையாக அயன் செய்வது எப்படி. ஒரு சில பயனுள்ள குறிப்பு உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

காட்டன் புடவை பராமரிப்பு

பின் சொல்லக்கூடிய குறிப்பை காட்டன் புடவைகளுக்கும் பின்பற்றலாம். பிறகு சில்க் காட்டன் என்று சொல்லுவார்கள் அல்லவா ஆயிரம் ரூபாய்க்கு எல்லாம் பட்டுப்புடவை போலவே, இப்போது சில்க் காட்டனில் புடவை நமக்கு கிடைக்கிறது. அந்த மாதிரி புடவைக்கும் இதை பயன்படுத்தலாம். அசல் பட்டுப்புடவைக்கு, விலை உயர்ந்த புடவைகளுக்கு இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டாம்.

முதலில் ஒரு காட்டன் புடவையை எடுத்துக்கோங்க. அந்த காட்டன் புடவை மூழ்கும் அளவுக்கு ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுக்கவும். அதில் வெறும் 2 சொட்டு மட்டும் ஷாம்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். நிறைய ஷாம்பு ஊற்றி விட்டால், நிறைய நுறை வந்துவிடும்.

- Advertisement -

இந்த ஷாம்பு கலந்த தண்ணீரில் உங்கள் புடவையை முக்கி ஐந்து நிமிடம் வரை ஊற வைக்கவும். பிறகு இந்த புடவையை அப்படியே எடுத்து நல்ல தண்ணீரில் ஒரு முறை அலசிவிடுங்கள். அடுத்தது தான் மெயின் மேட்டர் இருக்கிறது. மீண்டும் அந்த பக்கெட்டில் சுத்தமான தண்ணீர் எடுக்கவும்.

அந்த புடவை மூழ்கும் அளவுக்கு எடுத்துக்கோங்க. அதில் மிகக் குறைந்த அளவு 2 சொட்டு ஃபெவிகால் போட்டு நன்றாக கரைத்து விட வேண்டும். ஆமாங்க ஒட்டக்கூடிய பசை, ஃபெவிக்கால் தான். தண்ணீரில் ஃபெவிகால் வெள்ளை வெள்ளையாக திட்டு திட்டாக தெரியக்கூடாது.

- Advertisement -

தண்ணீரில் அந்த ஃபெவிக்காலை உங்கள் கையை வைத்து கரைத்து விட்டு அந்த தண்ணீரில் இப்போது, நீங்கள் நல்ல தண்ணீரில் அலசி வைத்திருக்கும் புடவையை முக்கி, இரண்டு நிமிடம் கழித்து அந்த புடவையை அப்படியே எடுத்து சுருக்கம் இல்லாமல் ஓரளவுக்கு நிழலான பகுதியில் காய வையுங்கள்.

அதிக வெயிலில் போட்டால் புடவையில் இருக்கும் நிறம் ரொம்பவும் மங்கிப்போகும். வாஷிங்மெஷினில் துவைத்த புடவையாக இருந்தாலும் இப்படி ஃபெவிக்கால் கலந்த தண்ணீரில் முக்கி எடுத்து காய வைத்தால் அந்த புடவை அட்டை போல மொறுமொறுப்பாக ஸ்டிஃபாக இருக்கும்.

புடவை நன்றாக ஈரம் போக காயட்டும் பிறகு அயன் செய்ய வேண்டும். ஒரு சின்ன டம்ளர் தண்ணீர் எடுத்துக்கோங்க. அதில் 1 ஸ்பூன் அரிசி வடித்த கஞ்சியை கலக்கிக்கோங்க. மிகக் குறைந்த அளவு ஒரு சிட்டிகைக்கும் குறைவான அளவு ஃபெவிக்காலை இதில் போட்டு உங்கள் கையை வைத்து நன்றாக கரைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பல பேரும் அறிந்திடாத சின்ன சின்ன சமையலறை குறிப்புகள்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். காய்ந்த புடவையின் மேலே இந்த ஸ்பிரேவை அடித்து அயன் செய்து பாருங்கள். உங்களுடைய புடவை புதுப்பொலிவோடு சூப்பராக இருக்கும். புதுசாக வாங்கும் போது கஞ்சியில் இருக்கும் அந்த காட்டன் புடவையில் என்ன அழகு இருந்ததோ, அதே பொலிவு உங்களுடைய பழைய காட்டன் புடவைகளுக்கும் கிடைக்கும். இது ஒரு சுலபமான வீட்டு குறிப்பு. காட்டன் புடவைகள் அதிகம் வைத்திருப்பவர்கள் புடவையை அதிகமாக விரும்பவார்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -