பல பேரும் அறிந்திடாத சின்ன சின்ன சமையலறை குறிப்புகள்.

kitchen tips
- Advertisement -

சமையலறையே தங்கள் உலகமாக கருதும் அனைவருக்கும் இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ள குறிப்புகளாக இருக்கும். அன்றாடம் நாம் சமையலறையில் சந்திக்கும் சில பிரச்சினைகளுக்கு எளிமையான இந்த டிப்சை பின்பற்றி பாருங்கள். இது போன்ற இன்னும் பல டிப்ஸ்களை தெரிந்து கொள்ள வீட்டுக்குறிப்பு குறித்த பதிவில் பார்க்கலாம்.

நாம் அனைவரும் தினமும் காலையில் பால் காய்ச்சுவோம். அவ்வாறு பால் காய்ச்சும் பொழுது அருகிலேயே இருந்து பால் பொங்கும் பொழுது அடுப்பை அனைத்து விட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பால் பொங்கி அடுப்பை வீணாகிவிடும். நாம் இருந்தாலும் இல்லை என்றாலும் பால் வழிந்து கீழே ஊற்றாமல் இருப்பதற்கு ஒரு எளிய டிப்ஸ். பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் சில்வரில் இருக்கக்கூடிய வடிகட்டியை வைத்தாலே போதும். எவ்வளவு நேரம் ஆனாலும் பால் பொங்கினாலும், கொதித்தாலும் பாத்திரத்தை விட்டு ஒரு சொட்டு கூட கீழே சிந்தாது.

- Advertisement -

சமையலில் உப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு பொருள். உப்பு குறைந்தால் மறுபடியும் போட்டுக் கொள்ளலாம். அதிகரித்தால் அதை சமாளிப்பதற்கு போதும் போதும் என்று ஆகிவிடும். குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை நறுக்கி போடுவது, தக்காளியை ஆட்டி ஊத்துவது என்று ஏதாவது ஒன்றை செய்து சமாளித்து விடலாம்.

இதே பொரியலில் அதிகமாகிவிட்டால் என்ன செய்வது? ரொம்ப சிம்பிள் பொட்டுக்கடலை அல்லது உடைத்த கடலை என்று நாம் கூறுவோம் அல்லவா அதை மிக்சியில் பொடி செய்து பொரியலில் தூவி இரண்டு நிமிடம் கிளறிவிட்டு இறக்கி ருசித்து பாருங்கள். உப்பு சரியாகிவிடும். பொட்டுக்கடலை இல்லாதவர்கள் வேர்க்கடலை கூட உபயோகப்படுத்தலாம். ருசியும் வேற லெவல்ல இருக்கும்.

- Advertisement -

பொதுவாக பலரும் சாப்பாடை பானையில் வடித்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிட்டவர்களுக்கு குக்கரில் சாப்பாடு வைத்தால் பிடிக்கவே பிடிக்காது. ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும் கையில் தொட்டாலும் பிசுபிசுப்பாக இருக்கும். அவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் பிசுபிசுப்பு இல்லாமல் இருப்பதற்கு அரிசியை ஊற வைக்கும் பொழுது நான்கு ஐந்து ஐஸ்கட்டிகளை போடுங்கள் போதும். பிறகு எப்போதும் போல் நீங்கள் குக்கரில் வைத்தாலும் சாப்பாடு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக வடித்த சாதம் போல் இருக்கும்.

டீ போடும்பொழுது எவ்வளவுதான் டீத்தூள் போட்டாலும் ஸ்ட்ராங்காகவும் அதேசமயம் மணமாகவும் இல்லை என்று வருத்தப்படுகிறீர்களா? அப்போ இந்த டிப்ஸ்ச ட்ரை பண்ணி பாருங்க. கால் கிலோ டீ தூளுக்கு ஒரு சிறிய பாக்கெட் அளவு காபி தூளை கலந்து வச்சுக்கோங்க. இப்போ டீ போட்டு பாருங்க. கொஞ்சமா டீத்தூள் போட்டாலும் செம ஸ்ட்ராங்கா அதேசமயம் செம்ம வாசனையோட அருமையான கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பாத்ரூம் டைல்ஸே தெரியாத அளவுக்கு உப்பு கறை படிந்திருந்தால் கூட பத்து நிமிஷத்துல பளிச்சென்று சுத்தப்படுத்திடலாம்.

இந்த டிப்ஸ் நீங்களும் நாளைல இருந்து உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வித்தியாசம் உங்களுக்கு நல்லாவே தெரியும்.

- Advertisement -