தேங்காய் பால் எடுக்க இனி மிக்ஸி, கிரைண்டர் வேண்டாம். கரண்ட் இல்லை என்ற கவலையும் வேண்டாம். வெறும் 2 நிமிஷத்துல எதுவுமே இல்லாமல் தேங்காய்ப்பால் எடுப்பது எப்படி?

coconut-milk
- Advertisement -

காலை நேரத்தில் அவசர அவசரமாக சமைக்கும் போது தான் தேங்காய்ப்பாலை எடுக்கப் போகும்போது, மின்சாரம் துண்டிக்கப்படும். என்ன செய்வது என்றே தெரியாமல் பல பெண்கள் திண்டாடுவோம். ஆனால் அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள், நம்முடைய பாட்டிமார்கள் சுலபமான ஒரு வழி முறையை பின்பற்றி, தேங்காய்ப்பாலை எடுப்பார்கள். இது சில பேருக்கு தெரிந்திருக்கும். பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு. மிக்ஸி இல்லாமல், கிரைண்டர் இல்லாமல், அம்மிக்கல் இல்லாமல், கரண்ட் இல்லாமல் தேங்காய்ப்பாலை அவசர தேவைக்கு சுலபமாக எப்படி எடுப்பது?

உங்களுக்கு தேவையான அளவு தேங்காயை முதலில் துருவி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கம், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடுங்கள். தண்ணீர் தளதளவென கொதிக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் துருவலை போட்டு, 1 டம்ளர் அளவு கொதிக்கின்ற சுடுதண்ணீரை தேங்காயில் ஊற்றி, இதோடு ஒரே ஒரு கல் உப்பையும் போட்டு விடுங்கள். (ஒரு கல் உப்பை அந்த சுடுதண்ணீரில் ஊறும் தேங்காயில் போட்டால், தேங்காய் பால் இன்னும் அதிகமாக நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.) ரொம்பவும் உப்பை கொட்டி விட வேண்டாம். ஒரே ஒரு சிறிய உப்பு கல் மட்டும் போட்டாலே போதும்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு கரண்டியை வைத்து நன்றாக அந்த தேங்காயையும் தண்ணீரையும் அழுத்தி கிளறி விட வேண்டும். இந்த சுடு தண்ணீர் ஆறும் வரை தேங்காயை அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்பு ஒரு வெள்ளைத் துணியில் தேங்காய் திப்பியை வடிகட்டி, பிழிந்து எடுத்தால் நமக்கு தேவையான தேங்காய்ப்பால் கிடைத்துவிடும்.

தேவைப்பட்டால் அந்த திப்பியில் மற்றொரு முறை சுடு தண்ணீரை ஊற்றியும் தேங்காய் பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளலாம். மின்சாரம் இல்லாத சமயத்தில் இந்த குறிப்பு உங்களுக்கு மிகமிக உபயோகமானதாக இருக்கும். ஆனால் என்னதான் சுடு தண்ணீரை ஊற்றி தேங்காயிலிருந்து, தேங்காய்ப்பாலை எடுத்தாலும், அந்தத் தேங்காயில் சுத்தமாக நம்மால் தேங்காய் பாலை பிழிந்து எடுக்க முடியாது.

- Advertisement -

சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தவுடன் பழைய சிப்பியில் ஒரு முறை தண்ணீரை ஊற்றி மிக்ஸியில் தேங்காய் பாலை எடுத்துக் கொண்டாலும் அது உங்களுடைய இஷ்டம் தான். சுடு தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுத்த, அந்தத் தேங்காய் திப்பிகளை உடனடியாக தூக்கி குப்பையில் கொட்டி விட வேண்டாம்.

coconut-milk1

அந்த காலத்தில் எல்லாம் நம்முடைய பாட்டிமார்கள் பின்பற்றி வந்த குறிப்பு தான் இது. இன்று நம்மில் சில பேருக்கு இது மறந்தே போய்விட்டது. நினைவுகூற வேண்டும் என்பதற்காக, எல்லோருக்கும் உபயோகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட குறிப்பு. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -