தினசரி வழிபாட்டை இப்படி செய்தால், அந்த நாள் இனிய நாளாக அமையும். குறிப்பாக 3, 5 இந்த இரண்டு தேதியில் பிறந்தவர்களுக்கு சிறப்பு வழிபாட்டு டிப்ஸ்!

pillaiyar-prayer

நாம் காலையில் எழுந்து குளித்து முடித்து, சுத்தமான பின்பு, செய்யக்கூடிய முதல் வேலை இறைவழிபாடாகத் தான் இருக்க வேண்டும். அந்த வழிபாட்டை நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செய்கின்றோம்? சிலர் தீபம் ஏற்றி, நெய்வேதியம் படைத்து, இறைவனை பூஜித்த பின்புதான் தங்கள் அன்றாட வேலையை தொடங்குவார்கள். எல்லோராலும், இறைவனை இந்த முறைப்படி வழங்க முடியுமா? என்று கேட்டால், கட்டாயம் அது முடியாது. அதற்கு சாத்தியமும் இல்லை. ஒரே ஒரு தீபம் ஏற்றி, இறைவனை வணங்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலைதான், இன்று நம்முடைய வாழ்க்கை இருக்கிறது.

praying hand

இருப்பினும், ஆன்மீகத்தை எக்காரணத்தைக் கொண்டும் மறந்து விடக்கூடாது. நம் ஆன்மாவை சுத்தம் செய்யும் இறைவழிபாட்டை, இந்த முறையில் தான் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இருப்பினும், இப்படி செய்தால் நல்லது என்று சில சாஸ்திர குறிப்புகள் சொல்லுகின்றது.

பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்து, அறுசுவை உணவு படைத்து, மனதில் உண்மையான, நிறைவான பக்தி இல்லை என்றால், நீங்கள் இறைவனுக்காக செய்யும் எந்த ஒரு வழிபாட்டிற்கும் பலன் இல்லாமல் போய்விடும். உண்மையான அன்போடு, பக்தியோடு, பாசத்தோடு இறைவனுக்கு எதையுமே படிக்காமல், வெறும் கையில் இரு கை கூப்பி கும்பிட்டாலும் அதில் கோடி பலன் என்று சொல்லுவார்கள். இது நமக்கு தெரிந்ததுதான்!

praying god 4

சரி. எப்படி தான் இறைவனை கும்பிடுவது? எப்படித்தான் தினசரி வழிபாட்டை செய்வது? என்று நீங்கள் கேட்கும் கேள்வி, எனக்கு கேட்கிறது? காலையில் எழுந்து குளித்து முடித்து, சுத்தமான பின்பு, நீங்கள் பூஜை அறைக்கு சென்றாலும் சரி, அல்லது வேறு எங்காவது அமர்ந்து இருந்தாலும் சரி, முதலில் உங்களுடைய குருவிற்கு வணக்கம் சொல்லவேண்டும். அதன்பின்பு கணபதி, முருகன், துர்க்கா, ராஜராஜேஸ்வரி, அன்னபூரணி, லட்சுமி, சரஸ்வதி, நாராயண, சிவாசிவா! இந்த வரிசையில் இவர்களை மறவாமல், எவர் ஒருவர் தினமும், இவர்களுடைய நாமத்தை உச்சரித்து தங்களுடைய தினசரி வழிபாட்டை தொடங்கி, அதன்பின்பு தினசரி வேலைகளை செய்ய தொடங்குகின்றாரோ, அவர்களுக்கு அந்த நாள் கட்டாயம் இனிய நாளாக தான் அமையும்.

- Advertisement -

அதற்காக, இப்படி சாமி கும்பிட்டால், கஷ்டமே வராதா? என்ற விதண்டாவாத கேள்விகளுக்கெல்லாம் இங்கே இடமில்லை. இந்த முறையில் உங்களது வழிபாட்டை தொடங்கிப் பாருங்கள், ஏற்படக்கூடிய மாற்றத்தை. குறிப்பாக நீங்கள் 3ஆம் தேதி அல்லது 5ஆம் தேதியில் பிறந்திருந்தாலும், நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண் 5 அல்லது 3 ஆக இருந்தாலும் சரி, காலை உங்கள் தினசரி வழிபாட்டில், முதலில் சாய்பாபாவை உங்கள் குருவாக ஏற்று அவரை வழிபட்டு, அவருக்கு ஒரு முதல் வணக்கத்தை செய்துவரும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

Sai baba answers

உங்கள் வாழ்க்கையின் நிச்சயம் எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் இந்த வழி முறைப்படி, உங்கள் தினசரி வழிபாட்டை தொடங்கலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் எதையும் சோதித்துப் பார்க்க, வழிபாட்டை செய்யக் கூடாது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எதையெல்லாம் கெட்டது என்று ஒதுக்கி வைத்து விடுகின்றோமோ, அவையெல்லாம் நமக்கு நன்மை தரக்கூடியவை தான்! அவற்றில் சில உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vazhipadu. How to pray god in Tamil. How to Pray God. Daily Pray