நெற்றியில் எப்படி பட்டை போட வேண்டும் ? அதில் உள்ள தத்துவம் என்ன ?

thiruneeru-1

கோயிலிற்கு செல்லும் பலர் தங்கள் நெற்றியில் திருநீறை கொண்டு பட்டை போட்டுக்கொள்வது வழக்கம். இந்த பட்டையை எப்படி முறையாக போட்டுக்கொள்வது. பட்டை போட்டுக்கொள்வதற்கு பின் ஒளிந்துள்ள தத்துவம் என்ன ? பட்டையில் உள்ள கோடுகள் எதை குறிக்கிறது ? இப்படி பல விடயங்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

thiruneeru

வடதிசை அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களை கொண்டு கீழே சிந்தாமல் மூன்று கோடுகளாக நெற்றியில் பட்டை போடுவதே உத்தமம். திருநீறு அணிகையில் “சிவாய நாம” என்று மனதிற்குள் சிவ மந்திரத்தை கூறியவாறே அணிவது மேலும் சிறந்தது.

நெற்றியில் பட்டை போட உதவும் மூன்று விரல்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமா, நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இறுதியில் பிடி சாம்பலாக போவதே உறுதி ஆகையால் என்றும் இறை சிந்தனையோடு அற நெறி தவறாமல் வாழ வேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.

thiruneeru

திருநீறு அணிந்துகொள்வதற்கு பின் அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவை அனைத்தும் இரண்டாம் பட்ச காரமே. அதற்கான முழு முதற் காரணம், நம்முள் இருக்கும் சிவத்தை நாமே தரிசிக்க பேருதவி புரிகிறது திருநீறு. இதற்கு பெரும் மகிமை இருக்கிறது என்பதை உலக மக்களுக்கு உணர்த்தவே ”வெண்ணீற்றுப் பதிகம்” என்று திருநீருக்கு ஒரு தனி பதிகத்தையே பாடி இருக்கிறார் சம்பந்தர்.

munivar

இதையும் படிக்கலாமே:
இந்த கோவில் விபூதியை பூசிக்கொண்ட மாத்திரத்தில் நோய்கள் பறந்தோடும்

திருநீறு அணிவதன் மூலம் ஒருவர் செய்த பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. இறைபக்தி பெரிதாக இல்லாத ஒருவன் இறந்து போகும் தருவாயில் அவன் வளர்த்த நாயொன்று சாம்பலில் புரண்டு பின் அவன் மேல் சாம்பலை பதியச்செய்தது. அவன் இறந்த பிறகு, அவன் உடம்பில் இருந்த திருநீறை கண்டு எம தூதர்கள் பின்வாங்க, சிவகணங்கள் அவனை அழைத்து சென்றனர் என்று திருநீற்றின் மகிமையை உணர்த்தும் கதை ஒன்று உள்ளது. இப்படி பல மகிமைகள் கொண்ட திருநீறை நீங்களும் தினமும் அணிந்து வாழ்வில் பக்தியை பெருக்குங்கள்.