எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தை சாதிக்கலாம் தெரியுமா?

பொதுவாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவனமான சில குணங்கள் உண்டு. ஜோதிடத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் ஒருவரது குணாதிசயத்தை வைத்தே அவர்களது ராசியை சொல்லி விடுவார்கள். அந்த அளவிற்கு சில குணங்கள் வெளிப்படையாகவே தெரியும். அந்த வகையில் எந்த ராசிக்கார்களிடம் எப்படி பேசினால் ஒருவர் தங்களது காரியத்தை சாதிக்க முடியும் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்

மேஷம் ராசி நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. அதே சமயம் இவர்களை புகழ்ந்து பேசினால் நம் காரியத்தை சாதித்துக்கொள்ளலாம்.

ரிஷபம்

- Advertisement -

ரிஷபம் ராசி நண்பர்களிடம் மிகவும் கனிவாக பேசுவது சிறந்தது. அதன் மூலம் இவர்களிடம் நம் காரியத்தை எளிதில் சாதிக்கலாம்.

மிதுனம்

மிதுனம் ராசி நண்பர்களிடம் வளவள என்று பேசாமல் இருப்பது சிறந்தது. ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் பேசினாலும் அதிகமாக மற்றவர்களை ஆராய்ச்சி செய்வார்கள்.

கடகம்

கடகம் ராசி நண்பர்கள் அன்பை எதிர்பார்ப்பவர்கள். இவர்களிடம் அன்பாய் பேசினால் போதும் நமக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்வார்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களிடம் உண்மையாகவும் பொறுமையாகவும் பேசுவது சிறந்தது. இந்த ராசிக்காரர்கள் படபடவென்று பேசினாலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களிடம் நட்புபாராட்டினாலே போதும் அவர்கள் நமக்காக எதையும் செய்வார்கள். ஆனால் உத்திரம் கன்னி ராசியாக இருந்தால் அதிக எச்சரிக்கை வேண்டும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களிடம் கவனமாக பேசுவது சிறந்தது. ஏன் என்றால் இவர்கள் மற்றவர்களை எளிதில் கணித்துவிடுவார்கள். ஆகையால் இவர்களிடம் ஜாலியாக பேசினாலும் கவனமாக பேசவேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்கள் பொதுவாக மற்றவர்களிடம் அன்பாய் இருப்பார்கள். அதேபோல் இவர்களுக்கு கோவமும் கொஞ்சம் அதிகம் வரும். ஆகையால் இவர்களிடம் அனுசரணையாக பேசினால் காரியத்தை சாதிக்கலாம்.

தனுசு

தனுசு ராசி நண்பர்கள் எப்போதும் பிறரின் அன்பிற்கு அடிமையானவர்கள். ஆகையால் இவர்களிடம் அன்பாய் பேசினாலே போதும் காரியத்தை சாதித்துவிடலாம்.

மகரம்

மகர ராசி நண்பர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படையாக சொல்வார்கள். ஆகையால் இவர்களின் புலம்பலை கேட்டு அதற்கு ஆறுதல் சொன்னாலே போதும் இவர்களின் அன்பை பெற்று காரியத்தை சாதித்துவிடலாம்.

கும்பம்

கும்பம் ராசி நண்பர்கள் மிகுந்த ஆற்றல் மிக்கவர்கள். ஆனால் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த ஒரு தூண்டுகோல் எப்போதும் தேவை படும். ஆகையால் நீங்கள் அவர்களுக்கு தூண்டுகோலாய் இருந்தால் உங்கள் காரியத்தை சாதிக்கலாம்.

மீனம்

மீனா ராசி நண்பர்கள் மரியாதையை எதிர்பார்ப்பவர்கள். அதே போல் பெரிய இலக்கை நோக்கி ஓடுபவர்கள். ஆகையால் இவர்களிடம் மரியாதையாகவும், அவர்கள் தங்களது இலக்கை அடைய ஊக்குவிக்கும் வகையிலும் பேசினால் காரியத்தை சாதிக்கலாம்.

இது பொதுவாக கணிக்கப்பட்ட ராசி பலன். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப இதில் சில மாறுதல்கள் இருக்கும்.