எந்த ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா ?

astrology

ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிடத்தில் பொதுப்பலன் உண்டு என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை பொதுவாக எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்

Mesham

மேஷம் ராசிக்கார ஆண்கள் தன்னுடைய மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே சமயத்தில் மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்கள் தன்னுடைய துணை அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இவர் நினைத்த மாதிரி தன்னுடைய துணை இல்லை என்றால் மனவருத்தப்படுவார்கள்.

ரிஷபம்

Rishabam

ரிஷபம் ராசிகாரர்களுக்கு அவ்வப்போது தன்னுடைய துணையுடன் ஒற்றுமையற்ற நிலை ஏற்படும். இவர்கள் சில விடயங்களில் விட்டுக்கொடுக்காததால் பிரச்சனைவரும். கொஞ்சம் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எப்போதும் ஒற்றுமையாக வாழலாம்.

மிதுனம்

Midhunam

மிதுன ராசிக்காரர்கள் தனது துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். ஆனால் சிலருக்கு காதல் தோல்வி, திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சனை போன்றவை நிகழ வாய்ப்புள்ளது. இவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால், இவர்களின் இல்லற வாழ்க்கை சிறக்கும்.

Advertisement

கடகம்

kadagam

கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக நினைப்பார்கள். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார்கள். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

அதனால் இவர்களுக்குள் அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதுபோன்ற சமயத்தில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இவர்கள் வழக்கை சிறக்கும்.

சிம்மம்

Simmam

சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும்.

சிம்ம ராசிக்காரர்களிடம் பழகுவது மிகவும் கடினம். ஏனெனில் இவர்கள் தங்களுக்கு பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவார்கள். எனவே கோபத்தை குறைத்தால் வாழ்க்கை சிறக்கும்.

கன்னி

Kanni

தாயுள்ளம் கொண்ட கன்னி ராசிக்காரர்களின் இல்லற வழக்கை சந்தோஷமாகவே இருக்கும். அன்பே இவர்களது ஆயுதம். இவர்களுடைய குழந்தைங்கள் அறிவாளியாக இருப்பார்கள். இவர்களின் வாழ்வில், உயிர் தோழன், பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

Thulam

துலாம் ராசிக்காரர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம். இவர்களுக்கு கனவு அதிகம் வரும். துணைவியின் ஆலோசனையை கேட்டால் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

விருச்சிகம்

Viruchigam

விருச்சிகம் ராசிக்காரர்கள் தனது துணையை மிகவும் விரும்புவதுடன், தனது துணையை ஒரு காதலியாக நினைத்து சிறப்பாக வாழ்வார்கள். மேலும் தனது துணையை அனைத்து விதத்திலும் திருப்தியாக வைத்திருப்பார்கள்.

இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி மிகச் சிறந்த காதல் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

தனுசு

Dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு அமையும் துணை நல்ல குணம், உழைப்பாளி, மற்றும் அமைதியானவராக இருப்பார்கள். இவர்களது திருமண வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்கள் தனது துணையை முழுவதுமாக நேசிப்பார்கள். எனவே இவர்களுக்கு காதல் திருமணம் மிகவும் சிறப்பாக அமையும்.

மகரம்

Magaram

மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையான பகுதியை ரசித்துக் கொண்டிருப்பார்கள். காதல் திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும்.

கும்பம்

Kumbam

கும்ப ராசிக்காரர்கள் தனக்கான ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்வார்கள். ஆனால் அந்த கொள்கையை தனது துணையும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

இவர்கள் தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்களின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும்.

மீனம்

Meenam

மீனம் ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கையானது இனிப்பும் கசப்பும் நிறைந்ததாகவே இருக்கும். பிரச்சனை வருகிறதென்று துணையிடம் இருந்து விலகி சென்றால் மீண்டும் ஒன்று சேருவது கடினம். ஆகையால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இவர்கள் வழக்கை திருப்திகரமாக அமையும்..

இது பொதுவான ராசி பலன் தான். உங்கள் ஜாதகப்படி இதில் சில மாறுதகளும் இருக்கும்.