உங்கள் ராசிக்கான சுக்கிர யோகம் எப்படி..? வாருங்கள் பார்ப்போம்

astrology
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றால், அவருடைய ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்று இருக்கவேண்டும். இங்கே ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் இருந்தால், என்ன மாதிரியான பலன்களை வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்:

- Advertisement -

mesham

மேஷ ராசியானது சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்துக்கு 12-ம் இடமாகவும், துலாம் ராசிக்கு 7-ம் இடமாகவும் உள்ளதால், இல்லற வாழ்க்கையில் சிறு சிறு சலனங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு மற்றவர்களை அதிகாரம் செய்பவர்களாக இருப்பார்கள்.

ரிஷபம்:

- Advertisement -

rishabam

ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால், அன்பும் நல்ல பண்புகளும் கொண்ட வாழ்க்கைத்துணை அமைந்து, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது உறுதி. அன்பும் இரக்கமும் இவர்களிடம் ஒருங்கே காணப்படும். எந்த இடத்தில் இருந்தாலும் செல்வாக்குடன் திகழ்வார்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

புதனின் வீடான மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால், கலை, இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவராக இருப்பார்கள். செல்வமும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்வார்கள். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவராகவும் இருப்பார்கள்.

கடகம்:

kadagam

சந்திரனின் வீடான கடகத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவர்களாக இருப்பார்கள். எதிலும் ஒரு நேர்த்தியை விரும்புவார்கள். இவருடைய நல்ல பண்புகள் பலராலும் பாராட்டப்படும்.

சிம்மம்:

simmam

சூரியனின் வீடான சிம்மத்தில் சுக்கிரன் இருப்பின் வாழ்க்கைத்துணைக்குக் கட்டுப்பட்டு நடக்க நேரிடும். என்றாலும் வாழ்க்கைத்துணையால் சகல விதங்களிலும் நன்மை ஏற்படும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.

கன்னி:

kanni

புதனின் வீடான கன்னி சுக்கிரனின் நீச்ச வீடு என்பதால், இங்கே இருக்கும் சுக்கிரனால் எந்த ஒரு நன்மையும் ஜாதகருக்கு ஏற்படாது. குடும்ப வாழ்க்கையில் கணவன் – மனைவிக்கு இடையில் எப்போதும் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இங்கே இருக்கும் சுக்கிரன் நீச்சபங்கம் பெற்றிருந்தால் ஓரளவு நன்மைகளை எதிர்பார்க்கமுடியும்.

துலாம்:

thulam

இந்த ராசியும் சுக்கிரனின் ஆட்சி வீடாகும். இங்கே இருக்கும் சுக்கிரன் ஜாதகருக்கு அனைத்து விதமான சுகபோகங்களையும் தருவார். அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை அமையும். இந்த ஜாதகரால் வாழ்க்கைத்துணைக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்:

virichigam

இந்த இடத்தில் சுக்கிரன் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வீண் அலைச்சல் மிகுந்த வாழ்க்கையே அமையும். எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே இவர்களுடைய வாழ்க்கை அமையும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வீண் அவப்பெயரைத் தேடிக்கொள்வார்கள். சுபகிரக பார்வை பெற்றிருந்தால் அசுப பலன்களின் தாக்கம் குறையும்.

தனுசு:

dhanusu

இந்த ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். கலை இலக்கியங்களில் ஆர்வம் இருப்பதுடன், இவரே மிகச் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்வார். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவார். இல்லற வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

மகரம்:

magaram

சனியின் வீடான மகரத்தில் இருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு மன திடம் அதிகரிக்கும். இன்பம் துன்பம் எது வந்தாலும் சமமாக நினைத்து, கலக்கம் கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு கிடைக்காது.

கும்பம்:

kumbam

இதுவும் சனியின் வீடுதான் என்பதால், முன் சொன்னபடியே பலன்கள் ஏற்படும். அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கபடக்கூடும். இவருடைய எண்ணங்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கும். விரைவில் உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்ட இவர் மனதைப் பண்படுத்த யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.

மீனம்:

meenam

குருவின் வீடான மீனம் சுக்கிரனுக்கு உச்ச வீடு என்பது விந்தைதான். ஆம். பகை கிரகமான குருவின் வீடு அல்லவா மீனம்?! உச்சம் பெற்று அமைந்திருக்கும் சுக்கிரன், ஜாதகருக்கும் அனைத்து விதமான நன்மைகளையும், வாழ்க்கையில் சகல சுகபோகங்களையும் வழங்குவார். எல்லா வகைகளிலும் ஜாதகருக்கு நன்மைகளே ஏற்படும்.

மேலே சொல்லப்பட்டிருப்பவை சந்திர ராசியின்படி சுக்கிரன் அமைந்திருப்பதால் ஏற்படக்கூடிய பொதுவான ராசி பலன் தான். லக்னத்தில் இருந்து சுக்கிரன் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்பதை வைத்து பலன்கள் மாறுபடும்.

- Advertisement -