மிகவும் சுவையான ஹைதராபாத் தம் பிரியாணியை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் மீண்டும், மீண்டும்சுவைக்க தோண்டும் சுவையை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்

egg
- Advertisement -

ஹைதராபாத் முட்டை தம் பிரியாணி மிகவும் சுவையான பிரியாணி வகை. இது அவித்த முட்டை, சாதம், பொரித்த வெங்காயம், மற்றும் இதர மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும். ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில்  வேறுபட்ட சுவையுடன் இருக்கும். செட்டிநாடு பிரியாணி நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படுகிறது. ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி போன்றவை ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் சுவையான பிரியாணி வகை. முட்டை தம் பிரியாணி வெங்காய பச்சடி, மற்றும் வெள்ளரிக்காய் பச்சடி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1கப், பிரிஞ்சி இலை – 2, லவங்கம் – 5, சிறிய துண்டு பட்டை – 1, ஜாதிபத்திரி – 2, உப்பு 1 1/2 ஸ்பூன்,
எண்ணெய் – 5 ஸ்பூன், வெங்காயம் வறுப்பதற்கு – 2, சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 4, முட்டை – 6, கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, முந்திரி பருப்பு – 10, கொத்தமல்லி – சிறிதளவு, புதினா – சிறிதளவு, தக்காளி – 1, தயிர் – 1/4 கப்.

- Advertisement -

செய்முறை:
கப் பாஸ்மதி அரிசியை கழுவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் 5 முதல் 6 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.தண்ணீர் சூடானதும் 2 பிரிஞ்சி இலை, 5 லவங்கம், 1 இன்ச் பட்டை, 2 ஜாதிபத்திரி, தேவையான அளவு உப்பு மற்றும் 3 தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள அரிசியை  சேர்த்து கிளறவும்.முதல் 8 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது 90% சாதம் வேகும் வரை வைக்கவும். இப்பொழுது முற்றிலும் தண்ணீர் வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்-6 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வறுக்கவும்.  பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் 6 வேகவைத்த முட்டைகளை சேர்க்கவும். முட்டைக்கு தேவையான உப்பு, 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.1முதல் 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

- Advertisement -

அதே வாணலியில் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, இஞ்சி-பூண்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 10 முந்திரி பருப்பு கொத்தமல்லி இலை சிறிதளவு, புதினா இலைகள் சிறிதளவு, ஆகியவற்றை சேர்க்கவும். அதனுடன் 2 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் கரம் மசாலா, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1.5 ஸ்பூன் மல்லித் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

அதனுடன் 1 பழுத்த தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். தக்காளி மசியும் வரை வதக்கவும். பின்னர் 1/4 கப் கெட்டியான தயிர் சேர்த்து கிளறவும். மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். இப்போது பிரியாணி மசாலா தயாராக உள்ளது. பிரியாணி மசாலா வில் இருந்து பாதி அளவு மசாலாவை எடுத்து தனியே வைத்துக் கொள்ளலாம். இப்போது மீதமுள்ள மசாலாவில் மூன்று முட்டைகளை சேர்க்கவும். அதனுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை (  பாதி அளவு) சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்பொழுது எடுத்து வைத்துள்ள பிரியாணி மசாலா சேர்க்கவும். மீதமுள்ள சாதம், முட்டை, வறுத்த வெங்காயம், மற்றும் புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்பொழுது குறைவான தீயில் மூடி வைத்து 15 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கவும்.

- Advertisement -