விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் பலவீனமானது – இயான் சேப்பல்

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-1) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் 71 டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து. இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் இந்த தொடர் முழுவதும் இருந்தது அனைவரையும் வியக்க வைத்தது.

koli

இந்நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்தபடி உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயன் சேப்பல் இந்திய அணியின் வெற்றி குறித்து சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இயான் சேப்பல் : இந்திய அணியின் இந்த டெஸ்ட் தொடர் வெற்றி முற்றிலும் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலமே வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதை விட சிறப்பாக ஆடும் வீரர்கள் உள்ளனர். இந்த தொடரில் புஜாரா ஒருவரை மட்டுமே இந்திய அணி பலமாக கொண்டது என்று தெரிவித்தார். இந்த கருத்து ரசிகர்கள் இடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

pant-1

இந்திய அணியில் புஜாரா தவிர அகர்வால்,பண்ட் மற்றும் கோலி, ரோஹித் ஆகியோர் தேவைப்படும்போது சிறப்பான ஆட்டத்தினை இந்த தொடரில் அளித்தமையால் இயான் சேப்பல் கூறியது தவறு என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் .

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

மைதானத்தின் மேற்கூரைக்கு மேல் உயரமாக சிக்ஸ் அடித்த வாட்சன் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -